ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அனைவரும் எதிர்பார்த்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று கொழும்பு நகரில் துவங்கியது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே செப்டம்பர் இரண்டாம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் நான்கு விக்கெட்டுகளையும் 66 ரன்களுக்குள் இழந்து தடுமாறினர்.
ஆனால் நேபாள் அணியுடன் ஆனால் ஆட்டத்திற்கு பிறகு இந்தப் போட்டியில் இந்தியாவின் துவக்க ஜோடியான ரோஹித் சர்மா மற்றும் கில் முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தனர் . இதனைத் தொடர்ந்து அரை சதம் எடுத்த துவக்க வீரர்கள் ஆட்டம் இழக்கவே அதன் பிறகு ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் மிகச் சிறப்பாக ஆடி சதம் எடுத்ததில் இந்தியா ஐம்பது ஓவர்களுக்கு 356 ரன்கள் குவித்தது. விராட் கோலி 122 ரன்களுடனும் கேஎல் ராகுல் 111 ரன்கள்டனும் களத்தில் இருந்தனர்,
இவர்கள் இருவரும் சேர்ந்து ஆசிய கோப்பையில் பார்ட்னர்ஷிப் மூலம் அதிக ரன்களை சேர்த்து ஜோடி என்ற சாதனையை படைத்தது. விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் கூட்டாக மூன்றாவது விக்கெட்க்கு 233 ரன்கள் சேர்த்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து 357 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர். அவர்கள் அதிரடியாக ஆட முனைந்த போதும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆன முகமது சிராஜ் மற்றும் ஜஸ்ட்ப்ரீத் பும்ரா இருவரும் மிகத் திறமையாக பந்துவீசி பாகிஸ்தான் வீரர்களை ரன் எடுக்க விடாமல் தடுத்தனர்.
ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரின் முதல் பந்தில் இமாம் உல் ஹக் பும்ராவின் வேகத்தில் கில்லிடம் கேட்ச் கொடுத்து ஒன்பது ரன்களில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து மூன்றாவது வீரராக உலகின் நம்பர் ஒன் ஒருநாள் போட்டி பேட்ஸ்மேனும் பாகிஸ்தான் அணியின் கேப்டன்மான பாபர் அசாம் களத்திற்கு வந்தார். அவரும் ரன்கள் எடுக்க மிகவும் சிரமப்பட வேண்டி இருந்தது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆடுகளத்தின் தன்மை மற்றும் சூழலை சரியாக பயன்படுத்தி நல்ல லைன்களில் பந்து வீசினர்.
இதனால் பாகிஸ்தான் வீரர்களால் எளிதில் ரன் எடுக்க முடியவில்லை. நேபாள் அணிக்கு எதிராக 150 ரன்கள் எடுத்த பாபர் அசாம் இந்தப் போட்டியில் ஒரு ரன் எடுப்பதற்கே அவருக்கு 11 பந்துகள் தேவைப்பட்டது. 350 ரண்களுக்கு மேல் சேஸ் செய்ய வேண்டி இருந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு அதிரடியான துவக்கம் கிடைக்கவில்லை. இதனால் அவர்களின் பேட்ஸ்மேன்கள் அழுத்தத்திலேயே ஆடினர்.
WHAT A BALL FROM HARDIK…!!!
— Johns. (@CricCrazyJohns) September 11, 2023
He cleans up world number 1 ODI batter. pic.twitter.com/cLNfRlv3Sr
இந்நிலையில் ஆட்டத்தின் பவர் ப்ளே முடிந்து பதினோராவது ஓவரா வீச வந்த ஹர்திக் பாண்டியா தன் முதல் ஓவரிலேயே பாகிஸ்தான் அணியின் கேப்டன் மற்றும் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மனுமான பாபர் அசாமை கிளீன் போல்ட் முறையில் வெளியேற்றினார். ஹர்திக் பாண்டியா வீசிய 10.4 வது பந்து சீமில் பட்டு பாபர் அசாமின் ஸ்டம்புகளை சிதற செய்தது. முதல் இரண்டு பந்துகளை ஹர்திக் பாண்டியா அவுட் ஸ்விங்காக வீசிய நிலையில் இந்தப் பந்து இன்ஸ்விங் ஆகி வந்ததை பாபர் அசாமால் கணிக்க முடியவில்லை. அவர் 24 பந்துகளில் 10 ரன்கள் எடுத்த நிலையில் நடையை கட்டினார். அவர் கிளீன் போல்டான வீடியோ இந்த பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது

