உலகெங்கிலும் நடைபெற்று வரும் கிரிக்கெட் லீக் போட்டிகளை போல மேற்கிந்திய தீவுகளில் கரீபியன் பிரிமியர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிகள் அங்கு அங்கு உள்ள செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் தீவில் அமைந்துள்ள வாக்னர் பார்க் மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது.
ஆறு அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டியில் ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணி மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் நேற்று நடைபெற்ற போட்டியில் விளையாடியது. இந்த இரண்டு அணிகளும் முறையே ஐபிஎல் இல் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்தால் வாங்கப்பட்டுள்ள அணிகளாகும் .
இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 194 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து ஆடிய பார்படாஸ் அணி 12.1 ஓவர்களில் 61 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது . இதன் மூலம் 133 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது ட்ரின்பாகோ நைட்ரைடர்ஸ்.
இந்தப் போட்டியில் அந்த அணியின் துவக்க வீரரான நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த மார்ட்டின் கப்டில் மிகச் சிறப்பாக விளையாடி 58 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் அவர் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இவர் அடித்த நூறு ரன்களில் ஒரே ஒரு பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம் ஒரே ஒரு பவுண்டரி மட்டும் அடித்து சதம் எடுத்த வீரர்களின் பட்டியலில் தன்னையும் இணைத்து இருக்கிறார் மார்ட்டின் கப்டில். மேலும் இந்த சாதனை பட்டியலில் எந்தெந்த வீரர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள் என்று பார்ப்போம்.
நிக்கி வான் டென் பெர்க்ஹ்:
நமீபியா நாட்டைச் சார்ந்த நிக்கி வான் டென் பெர்க்ஹ் இந்த சாதனையை முதன் முதலில் நிகழ்த்தியவர். அமைபியாவில் நடத்தப்படும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் நார்த் வேஸ்ட் அணிக்காக விளையாடிய இவர் 2014 ஆம் ஆண்டு 101 ரன்கள் எடுத்தார். இதில் 12 சிக்ஸர்களும் ஒரே ஒரு பவுண்டரி மட்டும் அடங்கும் .
கிரீஸ் கெயில் :
யுனிவர்சல் பாஸ் என்று அழைக்கப்படும் கிரீஸ் கெயில் இந்த சாதனை பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மேலும் இந்த சாதனை ஐபிஎல் தொடரில் நடத்தப்பட்டது என்பது கூடுதல் சிறப்பம்சமாகும். 2018 ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய கிரீஸ் கெயில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 104 ரன்கள் எடுத்தார் . இதில் 11 சிக்ஸர்கள் மற்றும் ஒரே ஒரு பவுண்டரி அடங்கும் .
வில் யங்:
இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இடம் பெற்று இருப்பவர் நியூசிலாந்து வீரரான வில் யங். இவர் 2021 ஆம் ஆண்டு சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட் அணிக்காக விளையாடிய போது காண்டர்பரி அணிக்கு எதிராக 101 ரன்கள் எடுத்தார். அதில் 10 சிக்ஸர்களும் ஒரே ஒரு பவுண்டரி அடங்கும்.
Guptill – As smooth as they come 💯
— FanCode (@FanCode) August 31, 2023
.
.#CPLonFanCode #CPL2023 pic.twitter.com/motGCr20uN
மார்ட்டின் கப்டில்:
இந்த சாதனை பட்டியலில் தற்போது புதியதாக இடம் பெற்று இருப்பவர் மார்ட்டின் கப்டில். நேற்று நடைபெற்ற பார்படாஸ் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 58 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 9 சிக்ஸர்களும் 1 பவுண்டரையும் அடங்கும்,

