வீடியோ.. 6666… ஒரே ஓவரில் நாலாபுறமும் பறக்கவிட்ட சூரியகுமார் யாதவ்.. சொந்த ஐபிஎல் டீம் வீரருக்கு நேர்ந்த சோகம்.!

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலியா அணி மூன்று ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இது தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் வைத்து நடைபெற்றது.

- Advertisement -

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் ருத்ராஜ் 8 ரன்களில் ஆட்டம் இழந்தாலும் அதனைத் தொடர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கில் இருவரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் எடுத்தனர்.

- Advertisement -

இவர்கள் இருவரது அதிரடியில் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் 90 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவருடன் சிறப்பாக விளையாடிய கில் 97 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடியாக 200 ரன்கள் சேர்த்தனர்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய கேஎல் ராகுல் 38 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 52 ரன்களும் இஷான் கிஷான் 18 பந்துகளில் 31 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர் . இவர்களைத் தொடர்ந்து 40 வது ஓவரில் விளையாட வந்த சூரியகுமார் யாதவ் இன்றைய போட்டியில் ருத்ர தாண்டவம் ஆடினார். இவர் தனது சக மும்பை இந்தியன்ஸ் வீரரான கேமரூன் கிரீன் பந்தில் அடுத்தடுத்து நான்கு சிக்ஸர்களை அடித்து ஆஸ்திரேலிய அணியை மிரள வைத்தார் .

இவரது அதிரடி ஆட்டம் அதோடு நிற்கவில்லை. தொடர்ந்து 360 டிகிரியில் விளையாடிய இவர் 24 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். இவர் அடிக்கும் இரண்டாவது அரை சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி வரை ஆட்டம் இழக்காமல் நின்று விளையாடிய சூரியகுமார் யாதவ் 37 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இவரது அதிரடியால் இந்தியா 50 ஓவர்களில் 399 ரன்கள் குவித்தது .

- Advertisement -

இது இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்பு 2013 ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற போட்டியின் போது இந்திய அணி 383 ரன்கள் எடுத்தத இது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்தியா எடுத்து அதிகபட்ச ஒரு நாள் கோராக இருந்தது . இந்தப் போட்டியில் இந்திய அணி 399 ரன்கள் எடுத்திருப்பதன் மூலம் புதிய சாதனையை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பதிவு செய்து இருக்கிறது.

சமீப காலமாக ஒரு நாள் போட்டிகளில் சொதப்பி வந்த சூரியகுமார் யாதவ் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த இரண்டு போட்டியில் மிகச் சிறப்பாக ஆடி இரண்டு அரை சதங்கள் பதிவு செய்து இருக்கிறார். இதன் மூலம் அவர் தன் மீதான விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சூரியகுமார் யாதவின் அதிரடி வீடியோ இந்தப் பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles