வீடியோ.. 49.5 ஓவர்.. 1 பந்து மீதி.. 13 ரன் அடித்த மிட்செல் சான்ட்னர்.. நெதர்லாந்து நியூசிலாந்து போட்டியில் அரிய நிகழ்வு.!

இந்தியாவில் நடைபெற்று வரும் 13 வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியில் நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் நேற்று ஹைதராபாத்தில் வைத்து விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி நியூசிலாந்து அணியை முதலில் பேட்டிங் செய்ய பணிந்தது.

- Advertisement -

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 322 ரன்கள் குவித்தனர். அந்த அணியின் துவக்க வீரரான வில் யங் 70 ரன்களும் கேப்டன் டாம் லேதம் 53 ரன்களும் ரச்சின் ரவீந்தரா 51 ரன்களும் எடுத்தனர். இறுதியில் வந்து அதிரடியாக விளையாடிய ஆல்ரவுண்டர் சாந்த்னர் 17 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் மூன்று பௌண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து விளையாடிய நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் 223 ரன்கள் அவுட் ஆனது. அந்த அணியின் ஆக்கர்மேன் அதிகபட்சமாக 69 ரன்களும் கேப்டன் எட்வார்ட்ஸ் 30 ரன்கள் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி 99 ரன்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நியூசிலாந்து அணி முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று நான்கு புள்ளிகள் உடன் முதல் இடத்தில் இருக்கிறது .

- Advertisement -

அந்த அணியின் பந்துவீச்சில் ஆல்ரவுண்டர் சாந்த்னர் 59 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் வேகப்பந்துவீச்சாளர் ஹென்றி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்தப் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட சாந்த்னர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் சிறப்பாக பந்து வீசினார். ஆனால் அதிக விக்கெட் களை வீழ்த்த முடியவில்லை. இந்தப் போட்டியில் ஐந்து விக்கெட் கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நேற்றைய போட்டியின் இறுதி ஓவரின் போது அரிதான நிகழ்வு ஒன்று நிகழ்ந்தது. அதாவது ஐம்பதாவது ஓவரின் இறுதிப் பந்தில் நியூசிலாந்து அணியின் சாந்த்னர் ஒரே பந்தில் 13 ரன்கள் சேர்த்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வு கிரிக்கெட் ரசிகர்களிடம் வைரலாகி இருக்கிறது. நியூசிலாந்து அணியினர் கடைசி கட்ட ஓவர்களில் அதிரடியாக விளையாடி ரன்களை வேகமாக குவித்தனர். இதனால் அந்த அணி 300 ரன்கள் நெருங்கியது.

- Advertisement -

இந்நிலையில் ஆட்டத்தின் இறுதி ஓவரை நெதர்லாந்து அணியின் ஆல்ரவுண்டர் பஸ் டி லீட் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்து நோ பாலாக அமைந்தது. அந்தப் பந்தை சிக்ஸருக்கு விலாசினார் சாந்த்னர். இதனைத் தொடர்ந்து ஃப்ரீ ஹிட் வழங்கப்பட்ட அடுத்த பந்திலும் சிக்ஸ் இருக்கு விலாசி ஒரே பந்தில் 13 ரன்களை சேர்த்தார் சாந்த்னர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.ஒரே பந்தில் 13 ரன்கள் அடித்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

நேற்றைய நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டயை தொடர்ந்து இன்று இரண்டு போட்டிகள் ஒரே நாளில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் தர்மசாலாவில் விளையாடி வருகின்றன. இதனைத் தொடர்ந்து நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் ஹைதராபாத்தில் விளையாடுகின்றன.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles