[வீடியோ] 100 ரன் 45 பந்து..12 சிக்ஸ்.. மாஸ் காட்டிய 143 கிலோ WI வீரர்.. சிபிஎல்-ல் அட்டகாசம் .!

2023 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை போட்டிகளுக்கு இன்னும் ஒரு மாதங்களே இருக்கிறது. இந்நிலையில் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடைபெற்ற உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டியில் படுதோல்வி அடைந்து வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ் அணி .

- Advertisement -

இதனால் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக உலகக்கோப்பை போட்டிகளில் பங்கு கொண்டு விளையாடும் வாய்ப்பு அந்த அணி இழந்திருக்கிறது. இந்நிலையில் வெஸ்ட் வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில் கரீபியன் பிரிமியர் லீக் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஆறு அணிகள் கலந்து கொள்ளும் இந்தப் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் அண்ட் நிவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய செயின்ட் கிட்ஸ் அண்ட் நிவிஸ் பேட்ரியாட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய அந்த அணியின் துவக்க வீரர்களான ஆண்ட்ரூ பிளட்சர் 37 பந்துகளில் 56 ரன்களும் வில் ஸ்மீட் 36 பந்துகளில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் ஐந்து பௌண்டரிகளுடன் 63 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அந்த அணியின் கேப்டன் ரூதர்போர்டு அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 67 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்

- Advertisement -

இதனைத் தொடர்ந்து 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பார்படாஸ் ராயல்ஸ் அணியில் அந்த அணியின் துவக்க வீரரான ரஹீம் கார்ன்வெல் விஸ்வரூபம் எடுத்து ருத்ரதாண்டவம் ஆடினார். இவர் மிகவும் அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 12 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகளுடன் 102 ரன்கள் எடுத்து ரீட்டைடு ஹர்ட் முறையில் வெளியேறினார் . அந்த அணியின் கேப்டன் ரோமன் பாவல் 26 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதனால் பார்படாஸ் அணி 18.1 ஓவரில் 223 ரண்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது..

இந்தப் போட்டியில் 48 பந்துகளில் 102 ரன்கள் எடுத்த ரஹீம் காரன்வெல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். சமீபகாலமாக இந்த வீரரை பற்றிய சர்ச்சை கிரிக்கெட் வட்டாரங்களில் நிலவு வருகிறது. இவரது உருவத்தை பற்றி கேலி செய்யும் மீம்ஸ்களும் அது தொடர்பான விமர்சனங்கள் உன் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது. சிபிஎல் தொடரின் முதல் போட்டியில் கூட இவரது ரன் அவுட்டை பலரும் கிண்டல் செய்து பதிவிட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று இவர் ஆடிய இந்த ருத்ரதாண்டவத்தின் மூலம் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருப்பதோடு திறமைக்கு எதுவும் தடை இல்லை என ஆணித்தனமாக பதிவு செய்திருக்கிறார் ரஹீம் காரன்வெல் .

- Advertisement -

துவக்கத்திலிருந்து அதிரடி ஆட்டத்தில் இறங்கிய இவர் சீன் கிட்ஸ் மற்றும் நிவிஸ் அணியின் பந்துவீச்சாளர்களை மைதானத்தின் எல்லா திசைகளுக்கும் சிக்ஸர்களாக அனுப்பி திக்கு முக்காடச் செய்தார். நேற்றைய இவரது அதிரடி ஆட்டம் ரசிகர்களுக்கு ஞாயிறு விருந்தாக அமைந்தது என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் இவர் தனது சதத்தை நிறைவு செய்ததும் மிகவும் ஆக்ரோஷமாக அதனை கொண்டாடினார் . அது இவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும் இவரது உருவம் குறித்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் இருந்தது.

45 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்த இவர் தனது ஹெல்மட்டை கழட்டும்போது தன்னுடைய கிரிக்கெட் பேட்டை கீழே போட்டு ஆக்ரோஷமாக தனது சந்தோசத்தை வெளிப்படுத்தினார். மைக் ட்ராப் செலிப்ரேஷன் என்று இது சமூக ஊடகங்களிலும் மீடியாக்களிலும் அழைக்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்து அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட்,ஆஸ்திரேலியா அணியின் உஸ்மான் கவாஜா, இந்திய அணியின் வீரர் கருண் நாயர் ஆகியோரும் இதே போல் தங்களது சதத்தை ஆக்ரோஷமாக கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஹீம் கார்ன்வெல் சதத்தை நிறைவு செய்து கொண்டாடிய வீடியோ இந்த பதிவுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles