வெறும் 37 பந்தில் வெற்றி.. சாம்பியனான இந்தியா.. இலங்கை ஆசிய கோப்பையில் பரிதாப தோல்வி.!

தற்போது நடைபெற்று வந்த 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்றுடன் முடிவடைந்து இருக்கிறது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி எட்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இருக்கிறது.

- Advertisement -

இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களான பும்ரா மற்றும் முகமது சிராஜ் மிகச் சிறப்பாக பந்து வீசினர் . இலங்கை அணியினரால் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் என்ன செய்வதென்றே தெரியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்து வெளியேறினர்.

- Advertisement -

ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே அந்த அணியின் குஷால் பெரேரா ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து பதும் நிசாங்கா மற்றும் குசால் மெண்டிஸ் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். ஆனால் முகமது சிராஜ் வீசிய ஒரே ஓவரில் இலங்கை அணியின் முதுகெலும்பு ஒடிந்தது.

- Advertisement -

நான்காவது ஓவரை வீசிய சிராஜ் அந்த ஓவரின் முதல் பந்தில் பதும் நிசங்கா விக்கெட்டை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து அதே ஓவரின் மூன்றாவது பந்தில் சமரவிக்ரமா விக்கெட்டையும் நான்காவது பந்தில் அசலங்கா விக்கெட்டையும் வீழ்த்தினார். அதற்கு அடுத்த பந்தில் ஒரு பவுண்டரி கொடுத்து அந்த ஓவரின் இறுதிப் பந்தில் தனஞ்செயா டிசிவா விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் 8 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்த இலங்கை அந்த ஓவரின் இறுதியில் 12 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்திருந்தது.

இந்த சரிவிலிருந்து இலங்கை அணியால் மீளவே முடியவில்லை. அதன் பிறகு ஆட வந்த இலங்கை அணியின் கேப்டன் சனக்கா விக்கெட்டை கிளீன் போல்ட் மூலம் சிராஜ் அவுட் செய்ய இலங்கை அணியின் மொத்த நம்பிக்கையும் சுக்குநூறானது. இதனைத் தொடர்ந்து ஒரு முனையில் விளையாடிக் கொண்டிருந்த மெண்டிஸ் 17 ரன்களில் சிராஜ் பந்தில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். மேலும் இலங்கையின் பின்வரிசை ஆட்டக்காரர்களும் ஒற்றை இலக்கங்களில் ஆட்டம் இழக்க இலங்கை அணி 15.2 ஓவர்களில் 50 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இது இலங்கை அணியின் இந்தியாவிற்கு எதிரான மிகக் குறைந்த ஒரு நாள் போட்டி ரன்கள் ஆகும்.

- Advertisement -

இலங்கை அணியின் பேட்டிங்கை பொறுத்த வரை குசால் மெண்டிஸ் மட்டும் 17 ரண்களும் துஷாந்த் ஹேமந்த 13 ரண்களும் எடுத்திருந்தனர். இந்திய அணியின் பந்துவீச்சில் முகமது சிராஜ் மிகச் சிறப்பாக பந்துவீசி 21 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார், ஹர்திக் பாண்டியா 3 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 6.1 ஓ வர்களிலேயே வெற்றி இலக்கை எட்டி எட்டாவது முறையாக ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது . அணியின் துவக்க வீரர்களான கில் மற்றும் இஷான் கிஷான் அதிரடியாக ஆடி 37 பந்துகளிலேயே 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவிற்கு வெற்றியை தேடி தந்தனர், இஷான் கிஷான் 18 பந்துகளில் 23 ரன்கள்டனும் கில் 19 பந்துகளில் 27 ரன்கள்டனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles