ரொம்ப கேவலம்.. அவர் மேல இருந்த மரியாதையே போச்சு.. என்கிட்ட ஆதாரம் இருக்கு.. இலங்கை வீரர் மேத்யூஸ் கோபமான பேட்டி.!

நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் 38 வது போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி உலக கோப்பையில் இரண்டாவது வெற்றியைப் பெற்று இருக்கிறது.

- Advertisement -

நேற்றைய போட்டியில் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டம் இழந்த விதம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பலரும் அந்த ஆட்டம் இழப்பிற்கு சாதகமாகவும் எதிராகவும் இரு வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். எனினும் இலங்கை அணியினரின் மத்தியில் மேத்யூஸ் அவுட் ஆன விதம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அவர்கள் போட்டி முடிந்த பின்பு பங்களாதேஷ் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்து விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

போட்டிக்கு பின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஏஞ்சலோ மேத்யூஸ் பங்களாதேஷ் அணியினர் மற்றும் ஷகீப் அல் ஹசன் ஆகியோர் மீது தான் வைத்திருந்த மரியாதையை அவர்கள் எடுத்துக் கொண்டதாக தெரிவித்திருக்கிறார். மேலும் இது போன்ற ஒரு செயலை பங்களாதேஷ் அணியை தவிர வேறு எந்த அணியும் செய்யாது எனவும் கடுமையாக பேட்டியளித்திருக்கிறார் ஏஞ்சலோ மேத்யூஸ். ஆனால் பங்களாதேஷ் அணியின் கேப்டன் ஷகீப், ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டம் இழந்தது குறித்து தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஏஞ்சலோ மேத்யூஸ் ” நான் எந்த தவறும் செய்யவில்லை. இது சக்கி புல்காசன் மற்றும் பங்களாதேஷ் அணியினரின் ஒரு அவமானகரமான செயல். இந்த விஷயத்தில் கொஞ்சமாவது பொது அறிவை பயன்படுத்தி இருக்க வேண்டும். என்னுடைய 15 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் இது போன்று ஒரு மோசமான நிகழ்வை சந்தித்ததில்லை” என்று தெரிவித்தார்.

மேலும் பங்களாதேஷ் அணியின் உங்கள் வீரர்கள் கைகுலுக்க மறுத்துவிட்டனர் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்” உங்களுக்கு யார் மரியாதை தருகிறார்களோ அவர்களுக்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டும். முதலில் நாம் விளையாடும் இந்த விளையாட்டை மதிக்க வேண்டும். நாம் அனைவருமே இந்த அழகிய விளையாட்டின் தூதுவர்கள். போட்டியின் நடுவர்களும் இந்த விளையாட்டின் தூதுவர்கள் தான். நீங்கள் மரியாதை கொடுக்கவில்லை மேலும் உங்களது பொது அறிவையும் பயன்படுத்தவில்லை என்றால் வேறு என்ன நீங்கள் எதிர்பார்க்க முடியும்.? என கேள்வி எழுப்பினார்.

- Advertisement -

இதுகுறித்து தொடர்ந்து தனது கருத்துக்களை முன் வைத்த மேத்யூஸ் ” இந்த நிகழ்விற்கு முன்பு வரை ஷகீப் அல் ஹசன் மற்றும் பங்களாதேஷ் அணியினர் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருந்தேன். நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் வெற்றிக்காக தான் விளையாடுகிறோம். என்னுடைய ஆட்டம் இழப்பும் விதிமுறைக்கு உட்பட்டு தான் இருக்கிறது. ஆனால் விதிமுறை என்ன சொல்கிறது .? இரண்டு நிமிடங்களுக்குள் நான் களத்தில் இருந்தேன். இது தொடர்பாக எங்களது கிரிக்கெட் நிர்வாகம் புகார் அளிக்க இருக்கிறது.

“நான் ஏதோ பிரச்சனை செய்ய வேண்டும் என்று பேசவில்லை எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. சமர விக்கிரமா கேட்ச் செய்யப்பட்டதிலிருந்து நான் ஆடுகளத்திற்கு வந்தவரை ஐந்து நொடிகள் மீது இருந்தது . அப்போதுதான் எனது ஹெல்மெட் உடைந்தது தொடர்பாக அதனை மாற்ற அனுமதி கேட்டேன். இது விதிமுறைகளுக்கு உட்பட்டு தானே இருந்தது” எனக் கூறியிருக்கிறார் மேத்யூஸ்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles