நடைபெற்று முடிந்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் வீரர் வைபவ் சூரியவன்சி பும்ராவின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளாகி இருக்கிறது. பெரிய பெரிய பேட்ஸ்மேன்களே அவரது பவுலிங் எதிராக தடுமாறி வரும் நிலையில் வெறும் 15 வயதான ஒரு வீரர் அவரது பந்தை சிரமம் இன்றி எதிர்கொள்வது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் நான் பும்ராவின் பந்துவீச்சை எப்படி எதிர்கொள்ள தயாராக இருந்தேன் என்று வைபவ் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும் போது “நான் ஒரு பெரிய பவுலரை எதிர்த்து விளையாடுகிறேன் என்பது எனக்கு ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை. நான் அப்போது என்னை மட்டுமே என் பேட்டிங்கை நம்பி மட்டுமே இருந்தேன். அவ்வளவு அவ்வளவு பெரிய வீரர் முன்னால் நான் சற்று பதட்டமாக இருந்தது உண்மைதான்.
ஆனால் அப்போது என் பதட்டத்தை விட்டு விட்டு என் மீது நம்பிக்கை வைத்து என் திட்டத்தில் கவனம் செலுத்தினேன். நான் போட்டிக்கு முதல் நாள் முன்பாகவே சீக்கிரம் வலை பயிற்சிக்கு சென்று விட்டேன். அப்போது எனக்கு வெகு பக்கத்தில் என்று பந்தை வேகமாக எறிந்தார்கள். இது போன்ற பயிற்சிகள் எனக்கு போட்டியின் போது பந்தை எதிர்கொள்வதற்கு நிறைய நேரத்தை கொடுக்கிறது. இது எனக்கு மும்பை போட்டியில் உதவியது” என்று பேசி இருக்கிறார்.

