மழையால் வந்த வினை.. இந்திய அணிக்கு சிக்கல்.. பாகிஸ்தான் அணிக்கு லக்.. அடுத்த போட்டியில் இது நடந்தால் ஆசிய கோப்பை விட்டு வெளியே போக வேண்டியது தான்.!

ஆசிய கிரிக்கெட்டில் சாம்பியன் யார் என்பதை நிரூபிப்பதற்காக ஆசிய கண்டத்தில் உள்ள கிரிக்கெட் விளையாடும் அணிகளுக்கிடையே இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் 16 வது ஆசிய கோப்பை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் வைத்து நடைபெற்று வருகிறது

- Advertisement -

இதில் முதல் இரண்டு ஆட்டங்களிலும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெற்றி பெற்றன. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் இரண்டாம் தேதி ஆன நேற்று உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியை இலங்கையின் கண்டி நகரில் வைத்து நடைபெற்றது.

- Advertisement -

நேற்றைய கண்டி நகரின் வானிலை மேக மூட்டத்துடன் காணப்பட்டதாலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என முன்னரே வானிலே அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்ததால் போட்டி நடைபெறும் என்ற சந்தேகத்துடன் ரசிகர்கள் இந்த போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் இந்த போட்டியானது திட்டமிட்டபடி சரியாக மாலை 3 மணிக்கு துவங்கியது.

- Advertisement -

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். மேலும் நேற்றைய போட்டியில் இந்திய அணியில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் வேகப்பந்துவீச்சாளர் முகமது சமிக்கு பதிலாக பவுலிங் ஆல் ரவுண்டர் சார்துல் தாகூர் ஆடும் லெவனில் இடம் பெற்று இருந்தார். நேற்றைய போட்டி துவங்கிய சிறிது நேரத்திலேயே மழை பெய்ததால் 15 முதல் 20 நிமிடங்களுக்கு போட்டி ஒத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் விராட் கோலி ஆகிய இருவரும் ஷாஹிம் ஷா அப்ரிதியின் வேகத்தில் போல்டாகி அடுத்தடுத்து வெளியேறினர்.

ரோஹித் சர்மா 11 ரன்களிலும் விராட் கோலி 4 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இதனைத் தொடர்ந்து இந்திய அணியை 27 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நான்காவது வீரராக ஆட வந்த ஸ்ரேயாஸ் ஐயர் தனது கணக்கை அதிரடியாக துவங்கினாலும் ஒன்பது பந்துகளில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஹாரிஸ் ரவுப் வேகத்தில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து துவக்க வீரர் கில் 10 ரன் எடுத்திருந்த நிலையில் ரவுப் வேகத்தில் போல்ட் ஆகி வெளியேறினார். இதனால் இந்திய அணி ஒரு கட்டத்தில் 66 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது.

- Advertisement -

அப்போது இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் இசான் கிஷான் மற்றும் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா இருவரும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இவர்கள் இருவரும் தங்களது விக்கெட்டுகளை விட்டுக் கொடுக்காமல் அதே நேரத்தில் அதிரடியாகவும் ஆடி ரன் குவித்தனர். இவர்கள் இருவரும் இணைந்து ஐந்தாவது விக்கெட் இருக்கு ஜோடியாக 138 ரன்கள் சேர்க்க இந்தியா சரிவிலிருந்து மீண்டது. சிறப்பாக ஆடிய இஷான் கிஷான் 81 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 82 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் . இவரைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா 90 பந்துகளில் 87 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷாகின் அப்ரிதி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

ஒரு கட்டத்தில் இந்தியா 300 ரன்கள் மேல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஆனால் பின் வரிசை ஆட்டக்காரர்கள் நிலைத்து நின்று ஆடாததால் 48.5 ஓவர்களில் 266 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஷாகின் அப்ரிதி 4 விக்கெட்களையும் ஹாரிஸ் ரவுப் மற்றும் நசீம் ஷா தலாம் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்நிலையில் இரண்டாவது பேட்டிங் இப்போது கடுமையான மழை பெய்ததால் இந்த ஆட்டம் கைவிடப்பட்டது.

இதனால் இந்திய அணிக்கு புதிய சிக்கல் உருவாகி இருக்கிறது . இதனைத் தொடர்ந்து இந்தியா செப்டம்பர் நான்காம் தேதி நடைபெற இருக்கும் நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது . ஒருவேளை ஏதேனும் அதிசயமான நிகழ்வுகள் நடந்து இந்திய அணியை தோல்வி பெரும் பட்சத்தில் ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியாக வேண்டிய சூழல் உருவாகலாம் . மேலும் இந்திய அணியின் இரண்டாவது போட்டியும் மழையால் கைவிடப்பட்டால் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு இந்திய அணி முன்னேறும் .

ஆசியக் கோப்பை தொடரில் விளையாடும் ஆறு அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதில் முதல் இரண்டு இடங்களை பெறும் பணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேறும் 2023 ஆம் வருட ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மற்றும்நேபாள் அணிகள் ஒரு பிரிவிலும் இலங்கை பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மற்றொரு பிரிவிலும் இடம் பெற்று இருக்கின்றன . இதில் நடந்து முடிந்த இரண்டு ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி நேபாள் அணியை வீழ்த்தி இரண்டு புள்ளிகளுடன் ஒரு பிரிவில் முதலிடத்தில் இருக்கிறது. மற்றொரு பிரிவில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியை வீழ்த்தி 2 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles