மத்தவங்க தான் பும்ராவுக்கு பயப்படனும.. ஆனா டிராவிஸ் ஹெட் ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் பொளக்கிறார்.. காரணம் இது தான் – கிரேக் சேப்பல்

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் போர் 1-1 என்ற நிலையில் சமனில் உள்ளது. நான்காவது போட்டியான பாக்ஸிங் டே டெஸ்ட் நாளை மெல்போர்ன் மைதானத்தில் நடக்கிறது.

- Advertisement -

இந்திய அணியின் பலமாக ஜஸ்பிரிட் பும்ரா மூன்று போட்டிகளில் 21 விக்கெட்டுகளை அளிள்யுள்ளார். பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணியின் மேல் தனி ஆளாக அழுத்தத்தை கொடுத்துள்ளார். ஆனால் இவரை எதிரணி பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் அழுத்தம் இல்லாமால் சமாளிப்பதாகவும் அதன் காரணத்தையும் கிரேக் சேப்பல் விவரித்துள்ளார்.

- Advertisement -

டிராவிஸ் ஹெட் இந்தத் தொடரில் 5 இன்னிங்சில் 2 சதம், 1 அரை சதம் என 81 சராசரியில் 409 ரன்கள் குவித்துள்ளார். இந்தத் தொடரின் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் சிறந்த பவுலர் எதிர்கொள்ளும் போது ஆஸ்திரேலிய அணியின் பேட்டர் டிராவிஸ் ஹெட் வெற்றிகரமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இது குறித்து கிரேக் சேப்பல் கூறியதாவது, ” இந்தத் தொடரில் பும்ராவுக்கு எதிராக டிராவிஸ் ஹெட் செயல்பட்ட விதம் அவரது பயமற்ற அணுகுமுறையைக் காட்டுகிறது. மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் பும்ராவின் வித்தியாசமான ஆக்க்ஷன், வேகம் மற்றும் துல்லியதை எதிர்கொள்ள தடுமாறும் போது ஹெட் அதனைச் சுலபமாக கையாண்டுள்ளார். “

” அடித்து ஆடக் கூறிய அணுகுமுறையால் பும்ராவின் ரிதமை நொறுக்குகிறார். மேலும் ஷார்ட் பந்துகளில் ஹெட்டுக்கு இருக்கும் தடுமாற்றத்தையும் தாண்டி அவர் அந்தப் பந்துகளில் சிறப்பாக ஆடுவது மிகவும் பாராட்டக்கூடியது. ” என்றார் சேப்பல்.

- Advertisement -

பும்ராவை டிராவிஸ் ஹெட் இந்தத் தொடரில் 91 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியுள்ளார். 12 பவுண்டரிகள் அடங்க மொத்தம் 83 ரன்கள் ஹெட் பக்கம் இருக்க, பும்ரா ஒரு முறை அவரின் விக்கெடையும் எடுத்துள்ளார். வெள்ளைப் பந்து வடிவக் கிரிக்கெட்டிலும் பும்ராவுக்கு எதிராக டிராவிஸ் ஹெட் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவது அவரது ஆதிக்கத்துக்கு காரணம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles