SRH vs MI.. 22 நிமிடங்களில் முறியடிக்கப்பட்ட 2 சாதனைகள்..10 ஓவர்களில் 148 ரன்கள்.. பேயாட்டம் ஆடும் சன்ரைசர்ஸ்.. பரிதவிக்கும் மும்பை

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற எட்டாவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடி வருகிறது. பேட்டிங்கில் ஹைதராபாத் அணி மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்து வருகிறது.

- Advertisement -

ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் லுக் வுட் நீக்கப்பட்டு தென்னாப்பிரிக்க அணியின் 17 வயதே ஆன அண்டர் 19 பிளேயர் மபாகா சேர்க்கப்பட்டார். ஹைதராபாத் அணியில் நடராஜன், ராகுல் திரிப்பாதி, யான்சன் ஆகியோர் நீக்கப்பட்டு டிராவிஸ் ஹெட் மற்றும் உனாத் கட் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

- Advertisement -

ஹைதராபாத் அணியின் இன்னிங்சை டிராவிஸ் ஹெட் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் தொடங்கினர். யாரும் எதிர்பாராத விதமாக இன்று மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் ஓவரை மபாகா வீசினார். இரண்டாவது ஓவரை பாண்டியா வீச மூன்றாவது ஓவரை மபாகா வீசினார். அதிலிருந்து ஹைதராபாத் அணியின் ரன் வேகம் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

- Advertisement -

தனது பேயாட்டத்தை தொடங்கிய ட்ராவிஸ் ஹெட் பும்ராவை தவிர அனைத்து பந்துவீச்சாளர்களையும் அடித்து நொறுக்கினார். வெறும் 18 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் ஒன்பது பௌண்டரி மற்றும் 2 சிக்சர்களை விளாசி 52 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஹைதராபாத் அணிக்காக டேவிட் வார்னர் 20 பந்துகளில் அரை சதம் அடித்து இருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது இந்தச் சாதனையை அவர் நாட்டைச் சேர்ந்த டிராவிஸ் ஹெட் முறியடித்து இருக்கிறார்.

தொடர்ந்து விளையாடிய ஹெட் 62 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்த சாதனை நிகழ்ந்த சில நிமிடங்களிலேயே அவருக்குப் பிறகு களம் இறங்கிய அபிஷேக் ஷர்மா வெறும் 16 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் ஆறு சிக்ஸர்களை விளாசி அரை சதத்தினை பூர்த்தி செய்தார்.

- Advertisement -

இதன் மூலம் 18 பந்துகளில் ஹைதராபாத் அணிக்காக அரைசதம் அடித்த ட்ராவிஸ் ஹெட்டின் சாதனையை உடைத்தார். 23 பந்துகளை எதிர்கொண்ட அவர் மூன்று பவுண்டரிகள், ஏழு சிக்ஸர்கள் என்று விளாசி 63 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அகர்வால் 13 பந்துகளில் 11 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

தற்பொழுது மார்க்கம் மற்றும் கிளாசன் ஆகியோர் ஹைதராபாத் அணியின் ரன் வேகத்தை உயர்த்திக் கொண்டிருக்கின்றனர். கிளாசன் தற்போது 78 ரன்களிலும், மார்க்ரம் 42 ரன்களிலும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். ஹைதராபாத் அணி தற்போது 19 ஓவர்களில் 275 ரன்கள் குவித்து இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles