சிஎஸ்கே ரசிகர்களுக்கு நற்செய்தி.. டிக்கெட் விற்பனை எப்போது தொடக்கம்?. என்ன விலை?. முழு விபரம் இதோ

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 22ஆம் தேதி சென்னை மற்றும் ஆர்சிபி அணிகள் மோத உள்ள நிலையில், அதற்கான டிக்கெட்டுகள் விற்பனை குறித்த விவரங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

17-வது ஐபிஎல் சீசன் வருகிற 22ஆம் தேதி சென்னையில் கோலாகலமாகத் தொடங்குகிறது. இதன் தொடக்கப் போட்டிக்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியாக நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நட்சத்திர வீரர்களைக் கொண்ட பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. சற்று இடைவெளிக்குப் பிறகு விராட் கோலி மீண்டும் ஆர்சிபி அணியில் இணைய உள்ளார்.

- Advertisement -

ஒரு வருட இடைவெளிக்கு பின்னர் சென்னை அணியின் வெற்றிகரமான கேப்டன் மகேந்திர சிங் தோனி களமிறங்க உள்ளதால், தோனியைக் காண ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தோனியும் ரசிகர்களை மகிழ்விக்க அவரது தொடக்க காலத்தில் எவ்வாறு நீளமான தலைமுடி உடன் இந்திய அணிக்குள் நுழைந்தாரோ இப்போது அதே ஹேர் ஸ்டைல் உடன் சென்னை அணையில் விளையாட வருகிறார்.

- Advertisement -

மேலும் 42 வயதாகும் தோனிக்கு, இதுவே கடைசி சீசன் ஆக இருக்கும் என கருதப்படுவதால் முன்பு உள்ள சீசன்களை விட இந்த சீசன் தற்போது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே தோனியைக் காண பெரும் ரசிகர் கூட்டம் மைதானத்திற்கு வரும் என்பதால் இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை குறித்த தேதி எப்போது வரும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். எனவே தற்போது டிக்கெட்டுகள் விற்பனை குறித்த தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த முறை முழுக்க முழுக்க ஆன்லைனிலேயே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இதனால் டிக்கெட்டுகள் மோசடி செய்யப்படுவதும், மைதானத்திற்குள் ரசிகர்கள் வெகு நேரம் காத்திருந்தும் டிக்கெட் எடுக்க முடியாத நிலையை தடுக்கவும் இந்த முறை அறிவிக்கப்படுகிறது. சிஎஸ்கே விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை பேடிஎம் இன்சைடர் செயலின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

- Advertisement -

ஒரு நபரால் இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே வாங்க முடியும். டிக்கெட்டுகளுக்கான விற்பனை மார்ச் 18ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் சி டி மற்றும் ஈ தளங்களில் அமைந்துள்ள ஸ்டாண்டுகளில் இருந்து ஆட்டத்தை கண்டு களிப்பதற்கான டிக்கெட்டின் விலை 1,700 ஆகவும், ஐ, ஜே, கே மேல் தளத்தில் அமைந்துள்ள ஸ்டாண்டுகளில் இருந்து ஆட்டத்தை காண 4000 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல ஐ, ஜே, கே கீழ் தளத்தில் அமைந்துள்ள ஸ்டாண்டில் இருந்த ஆட்டத்தை பார்க்க 4,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சி, டி, மற்றும் ஈ மேல் தளத்தில் இருந்து ஆட்டத்தைப் பார்க்க 4000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கே, எம், கே ஸ்டேண்டில் இருந்து பார்க்க 7,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாக குழு மற்றும் ஸ்பான்சர் ஆகியோரை கடந்து 18 ஆயிரம் டிக்கெட்டுகள் வரை விற்பனை செய்யப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles