சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடந்த ‘எல் கிளாசிகோ’ போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. என்னதான் செண்ண அணி வெற்றிப் பெற்றிருந்தாலும், அனைவரது பேச்சுக்கும் புருவ உயர்த்தலுக்கும் காரணமாக அமைந்தவர் ஒரு 24 வயது கேரள இளைஞன் – விக்னேஷ் புத்தூர். மூத்த அளவிலான டி20 போட்டியில் இதுவரை விளையாடாத இவர், சென்னையின் மிரட்டலான பேட்டிங் வரிசையை மிடில் ஓவர்களில் தடுமாற வைத்து, போட்டியை ஒரு திருப்புமுனையாக மாற்றினார்.
சி.எஸ்.கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே மற்றும் தீபக் ஹூடாவையும் ஒரே ஸ்பெல்லில் அவுட்டாக்கி சென்னை அணியின் மேல் அழுத்தத்தைப் போட்டார். 4 ஓவர்களில் 32 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அவரது ஆட்டம், மும்பை அணிக்கு வெற்றியைத் தராவிட்டாலும், அவரது திறமையை உலகுக்கு எடுத்துக்காட்டியது. அனைவரும் ஈர்த்த இந்த இளம் விக்னேஷிடம், போட்டி முடிந்த பின்னர் எம்.எஸ்.தோனி நிறுத்தி சில வார்த்தைகள் பேசினார். அது என்னவென்று தற்போது விக்னேஷ் புத்தூரின் நண்பன் ஸ்ரீராக் மூலம் வெளியாகியுள்ளது.
அவர் கூறியதாவது, ” நான் விக்னேஷுக்கு கால் செய்து முதலில் கேட்ட விஷயம் இது தான். எம்.எஸ்.தோனி உன்னிடம் என்ன பேசினார்நெனச் சொல்லு. எங்க அப்பா அம்மாவும் அதைத் தெரிஞ்சுக்க ஆவலா இருந்தாங்க. ” என்றார். இதற்க்கு பதிலளித்த விக்னேஷ், ” தோனி என்னிடம் வயசு என்னவென்று கேட்டார். பின்னர் நான் இன்று வெளிக்காட்டிய சிறந்த பவுலிங்கை தொடர்ந்து செய்ய சொல்லி வாழ்த்தினார். ஏனென்றால் அது தான் என்னை ஐ.பி.எலுக்கு அழைத்துக் கொண்டு வந்துள்ளது என்றும் அவர் கூறினார். ” இது விக்னேஷுக்கு மட்டுமல்ல, அவரை ஆதரித்து வந்த குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் பெருமை தரும் தருணமாக அமைந்துள்ளது.
கேரளா மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ், ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை சுனில் குமார் ஒரு ஆட்டோ ஓட்டுநர் மட்டுமே. பொருளாதார சவால்கள் இருந்தாலும், கிரிக்கெட் மீதான ஆர்வத்தை அவர்கள் தடுக்கவில்லை. விக்னேஷின் திறமையை முதலில் கல்லூரி அளவிலான டி20 போட்டிகளிலயே கண்டறிந்தது மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறப்பான ஸ்கவுட்டிங் குழு. அவரது சுழற்பந்து வீச்சு மும்பை அணியின் பார்வையை ஈர்ததால், அவர்களின் சார்ந்த செலவிலேயே, விக்னேஷை தென்னாப்பிரிக்க டி20 தொடரில் மும்பை கேப்டவுன் அணியின் வலைப் பந்து வீச்சாளராக அனுபவம் பெற அனுப்பியது. பின்னர், ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணி அவரை 30 லட்ச ரூபாய்க்கு வாங்கியது.
மும்பை இந்தியன்ஸின் ஸ்கவுட்டிங் அமைப்பு, ஜஸ்ப்ரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா போன்ற நட்சத்திரங்களை கண்டுபிடித்தது போல, விக்னேஷ் புத்தூரையும் ஒரு புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவாக்கியிருக்கிறது. மும்பை அணியின் ஸ்கவுட்டிங் உலகில் தலைசிறந்த ஒன்றாக இருக்கின்றது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

