என்னோட 16 வருஷ கிரிக்கெட் வாழ்க்கையில் சந்தித்த கஷ்டமான பவுலர் இவர்தான்.. ரோஹித் சர்மா பேட்டி.!

13 வது உலகக் கோப்பை பயிற்சி போட்டிகளில் இந்திய அணி இன்று இங்கிலாந்து அணியுடன் தனது முதலாவது பயிற்சி போட்டியில் விளையாட இருக்கிறது. கடந்த வாரம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது .

- Advertisement -

முதல் இரண்டு போட்டிகளில் ரோஹித் சர்மா விராட் கோலி ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்த நிலையில் 27 ஆம் தேதி நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஹர்திக் பாண்டியா தவிர மற்ற வீரர்கள் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து இருந்தாலும் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர்.

- Advertisement -

குறிப்பாக அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 57 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 6 சிக்ஸர்கள் அடங்கும். சர்வதேச கிரிக்கெட்டில் புல் ஷாட் விளையாடுவதில் திறமையான வீரரான ரோகித் சர்மா ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பான புல் ஷாட் ஆடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2019 உலகக்கோப்பையில் 5 சதங்களுடன் 648 ரன்கள் எடுத்திருந்தார்.

- Advertisement -

இந்த வருடம் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி கோப்பையை வெல்ல முயற்சி செய்வேன் என முன்னர் பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார் அவர். தற்போது இந்திய அணியின் முதல் பயிற்சி போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த ரோகித் சர்மா இந்திய அணியின் வருங்கால வீரர்கள் பற்றியும் தனது 16 வருட கிரிக்கெட் வாழ்வில் அவர் சந்தித்த கடினமான பந்துவீச்சாளர் பற்றியும் மனம் திறந்து இருக்கிறார்.

இது தொடர்பாக தனது பேட்டியில் தெரிவித்திருக்கும் ரோகித் சர்மா தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகபந்து புயல் டேல் ஸ்டெயின் தான் சந்தித்த பந்துவீச்சாளர்களில் மிகவும் அபாயகரமானவர் என்றும் அவருக்கு எதிராக விளையாடும் சவாலை மிகவும் விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார். இது பற்றி பேசிய ரோஹித்” ஸ்டெயின் ஒரு அற்புதமான பந்துவீச்சாளர். அவரது பந்துவீச்சில் பல சவால்களை சந்தித்து இருக்கிறேன். எனினும் அவருக்கு எதிராக விளையாடுவதையும் அவரது சவால்களையும் எதிர்கொண்டது ஒரு சிறந்த அனுபவம்” என்று கூறினார்.

- Advertisement -

கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் விளையாடும் புல் ஷாட் தனக்கு மிகவும் பிடித்தது என குறிப்பிட்ட ரோஹித் சர்மா, சச்சின் டெண்டுல்கர் உடைய ஸ்ட்ரைட் டிரைவ் மிகவும் ரசித்த ஷாட்களில் ஒன்று என தெரிவித்தார். மேலும் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் வருங்காலத்தில் பல சாதனைகளை படைக்கும் வீரராக வருவார் என்றும் அவர்தான் கிரிக்கெட்டின் வருங்கால நட்சத்திரம் எனவும் பாராட்டினார் ரோகித் சர்மா. அவரிடம் அதற்கான தனித்திறமைகளும் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் தற்போதைய இந்திய அணியில் டி20 சூப்பர் ஸ்டார் சூரியகுமார் யாதவ் எந்த சூழ்நிலையிலும் பதட்டம் அடையாத ஒரு கூலான வீரர் எனக் குறிப்பிட்ட அவர் சூரியகுமார் யாதவின் ஸ்கூப் ஷாட்கள் மிகவும் பிடிக்கும் எனவும் தெரிவித்தார். இந்திய அணி இந்த உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் அக்டோபர் எட்டாம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது . இந்திய ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களும் 12 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணி மீண்டும் உலக சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles