“பிளான் பண்ணி கவுத்துட்டாங்க.. அவங்க இப்படி பண்ணதால தான் நாங்க தோத்துட்டோம்” – பாபர் அசாம் வருத்தம்.!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சாதனை வெற்றி பெற்றது. மலையின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டி ரிசர்வ் நாளான நேற்றுதான் முடிவடைந்தது.

- Advertisement -

இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்தியா 50 ஓவர்களில் 356 ரன்களுக்கு இரண்டு விக்கெட் களை மட்டுமே இழந்தது. இந்திய அணியின் வீரர்களான கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி இருவரும் சிறப்பாக விளையாடி சதம் எடுத்தனர். மேலும் துவக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோர் அதிரடியாக அரை சதம் எடுத்து சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 32 ஓவர்களில் 128 ரன்களை மட்டுமே எடுத்து 8 விக்கெட்டுகளை இழந்திருந்த போது போட்டியை முடித்துக் கொண்டதாக அறிவித்தது. அந்த அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களான ஹாரிஸ் ரவுப் மற்றும் நஷீம் ஷா இருவரும் காயம் காரணமாக பேட்டிங் செய்ய வராததால் பாகிஸ்தான் அணியின் இன்னிங்ஸ் முடிவிற்கு வந்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் மிகச் சிறப்பாக பந்து வீசி 25 ரன்கள் மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்

- Advertisement -

இதனைத் தொடர்ந்து போட்டிக்கு பின் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம்” தட்பவெட்ப நிலை மற்றும் மலை எப்போது வரும் என்பது நம் கைகளில் இல்லை. நாங்கள் சிறப்பாக ஆடி இருக்க வேண்டும். ஆனால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் சராசரிக்கும் குறைவான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருக்கிறோம். எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்தோம் . ஆனால் இந்தியா மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது” என தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர்” இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோர் எங்கள் பந்து வீழ்ச்சிக்கு எதிராக மிகச்சிறந்த திட்டத்துடன் களம் இறங்கினர். அதனை வெற்றிகரமாக செயல்படுத்தியும் காட்டினர். அவர்கள் அமைத்துக் கொடுத்த சிறப்பான அடித்தளத்தை பின்பற்றிய விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இந்தியாவின் பேட்டிங்கை சிறப்பாக முடித்து வைத்தனர்” என தெரிவித்தார்.

- Advertisement -

இந்திய அணியின் துவக்க பந்துவீச்சாளர்களான முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரையும் வெகுவாக பாராட்டினார் பாபர் அசாம் . இது தொடர்பாக தனது கருத்தை பகிர்ந்து கொண்ட அவர் ” இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிராஜ் மற்றும் பும்ரா இருவரும் மிகச் சிறப்பாக பந்து வீசினார். ஆடுகளத்தை சிறப்பாக பயன்படுத்தி இன் ஸ்விங் அவுட் ஸ்விங் என எங்கள் பேட்ஸ்மேன் களை செட்டிலாக விடாமல் சரியான லைன் அண்ட் லென்த்தில் பந்துவீசி எங்களது ரண்குதிப்பிற்கு தொடக்கத்திலேயே முட்டுக்கட்டை இட்டனர் என தெரிவித்தார். மேலும் இந்தியா அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு தங்களை வீழ்த்தி இருப்பதாக கூறினார். மேலும் தங்களது பேட்டிங் வழக்கத்திற்கு மாறாக மோசமாக அமைந்தது என தெரிவித்தார்.

இந்தியா இன்று நடைபெறும் சூப்பர் 4 சுப்ரீம் மற்றொரு போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும். ஒருவேளை தோல்வி அடைந்தால் வெள்ளிக்கிழமை பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். இலங்கை அணி இன்று நடைபெறும் போட்டியில் தோல்வி அடைந்தால் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோத இருக்கும் போட்டி அரை இறுதிப் போட்டி போல இருக்கும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles