இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனி இன்றுடன் ஓய்வு பெற்று 6 ஆண்டுகள் கடந்துவிட்டது. 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில் தோனி குறித்த நினைவுகளை அவருடன் விளையாடிய சக வீரர்கள் பகிர்ந்துள்ளனர். அதன்படி ஸ்ரீசாந்த் அளித்த ஒரு பேட்டி தோனியை சிக்கலில் ஆழ்த்தி இருக்கிறது.
தோனியின் கமெண்ட்
தோனி 2010ஆம் ஆண்டு சாக்ஷியை திருமணம் செய்வதற்கு முன்பாக பல்வேறு பெண்களுடன் காதல் உறவில் இருந்தார். அதில் ஒருவர் நடிகை லக்ஷ்மி ராய். இந்த நிலையில் ஸ்ரீசாந்த் கூறும் போது, அந்த காலத்தில் சில வீரர்களுக்கு ஏராளமான காதலிகள் இருந்தனர். அதனை ஒருமுறை தோனி, எனக்கு நிறைய காதலிகள் கிடைப்பார்கள் போல.. ஒவ்வொரு மைதானத்திலும் ஒரு காதலையும் பிடிக்கலாம் என்று விளையாட்டாக கூறினார்.
அதேபோல், எனது திறமையை பற்றி நான் உணர்வதற்கு முன்பாகவே தோனி என்னை கணித்துவிட்டார். ஒருமுறை தோனி என்னிடம், கிரிக்கெட்டில் மிகப்பெரிய இடத்திற்கு செல்லும் திறமை உனக்கு இருக்கிறது. ஆனால் உன்னுடைய திறமையை பற்றி உனக்கே தெரியவில்லை என்று உணர்த்தினார். அதுதான் எனக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்தது.
கேப்டன் தோனியின் மொமண்ட்
2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் மேத்யூ ஹெய்டன் விக்கெட்டை வீழ்த்திய பின், மைதானத்தை தட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டேன். அப்படி ஒரு கொண்டாட்டத்தை ஏன் வெளிப்படுத்தினேன் என்று தெரியவில்லை. ஆனால் அது மேத்யூ ஹெய்டன் விக்கெட்.. ஒரு குத்துச்சண்டை போட்டியில் இருந்து வந்ததை போல் பவுலிங் செய்தேன். நேராக ஸ்டம்பை தெறிக்கவிட்டேன்.
மற்ற கேப்டன்களை விடவும் தோனி என்னை நன்றாக கட்டுப்படுத்தினார்.. ஒருமுறை நான்-ஸ்ட்ரைக்கரில் ரன் அவுட் செய்து அப்போல் செய்தேன். ஆனால் தோனி நேராக ஓடி வந்து எல்லை இழுத்து சென்று பவுலிங் செய்ய அறிவுறுத்தினார். எனது பெரும்பாலான கிரிக்கெட் வாழ்க்கை தோனிக்கு கீழ் அமைந்தது என்று தெரிவித்தார்.

