அடி தூள்.. யுவராஜ் சிங்கிற்க்கு அடித்த ஜாக்பாட்.. குஜராத் அணியில் முக்கிய பொறுப்பு.. களைகட்டும் ஐபிஎல் 2025

கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு புதியதாக லக்னோ மற்றும் குஜராத் அணிகள் களமிறங்கியதை அடுத்து மொத்தமாக 10 அணிகள் கடந்த மூன்று வருடங்களாக ஐபிஎல் தொடரில் பங்கேற்று வருகின்றன. அறிமுகமான முதல் வருடத்திலேயே குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வெற்றி பெற்று சாதனை படைத்தது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் தற்போது குஜராத் அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட நெக்ரா பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகப் போகிறார் என்ற தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

17 வருடங்களாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கு முன்னதாக இந்த ஆண்டு இறுதியில் மெகா ஆக்சன் நடைபெற இருக்கிறது. இந்த சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பாகவே பல்வேறு மாற்றங்கள் நிகழலாம் என்றும் கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாக கொல்கத்தா அணியில் செயல்பட்டு கொண்டிருந்த கௌதம் கம்பீர் மற்றும் அபிஷேக் நாயர் ஆகியோர் கொல்கத்தா அணியிலிருந்து வெளியேறி தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகின்றனர்.

- Advertisement -

மேலும் டெல்லி அணியின் பயிற்சியாளராக பதவி வகித்த ரிக்கி பாண்டிங் அந்த பதவியில் இருந்து வெளியேறி இருக்கிறார். அதேபோல அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கு முன்னதாக குஜராத் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் நெக்ரா வெளியேறப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் குஜராத் அணியின் அடுத்த பயிற்சியாளராக யுவராஜ் சிங் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக குஜராத் அணியின் பங்குகளை அதானி குழுமம் வாங்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுவே தற்போதைய மாற்றங்களுக்கு முக்கிய காரணமாகவும் இருக்கலாம்.

- Advertisement -

இதையும் படிங்க:என்னோட சின்ன வயசுலயே யுவி என்ன காப்பாத்துனாரு.. எனக்கு கிரிக்கெட் பிடிச்சதே அவர் ஆடின இந்த உலகக் கோப்பைனாலதான்- அபிஷேக் பேட்டி

2019ஆம் ஆண்டுக்குப் பிறகு யுவராஜ் சிங் எந்த ஐபிஎல் தொடரிலும் விளையாடவில்லை. மேலும் எந்த ஒரு அணிக்கும் ஆலோசகராகவோ, பயிற்சியாளராகவோ இதுவரை செயல்படாததால், குஜராத் அணிக்கு இவரை பயிற்சியாளராக நியமிப்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. புதிய சீசனில் இவரது தலைமையின் கீழ் குஜராத் அணி பல வெற்றிகளை பெறும் என்று எதிர்பார்க்கலாம். 2007ம் ஆண்டு டி20 உலக கோப்பையிலும், 2011 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையிலும் தொடர் நாயகன் விருதை வென்ற யுவராஜ் சிங் அந்த இரண்டு ஆண்டுகளும் இந்திய அணி உலக கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி இருக்கிறார். எனவே இவரது அனுபவம் நிச்சயமாக குஜராத் அணிக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles