உங்க 4 பேருக்கும் லாஸ்ட் சான்ஸ் தரேன்.. இந்த தடவையும் முடியலனா டீம விட்டு ஒதுங்கிருங்க.. கம்பீரின் அதிரடி முடிவு

இந்திய கிரிக்கெட் அணி தற்போது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பையில் பங்கேற்று வருகிறது. இந்த தடவை எப்படியாவது டி20 உலக கோப்பையை கைப்பற்றியே தீர வேண்டும் என்று இந்திய வீரர்கள் முழு வேகத்தோடு செயல்பட்டு வருகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக பொறுப்பேற்கப் போகும் கௌதம் கம்பீர் சில அதிரடி மாற்றங்களை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணிக்கு பயிற்சியாளராக தற்போது இருக்கும் ராகுல் டிராவிட் டி20 உலக கோப்பையோடு பயிற்சியாளர் பதவியை விட்டு விலகுவதால், கடந்த சில மாதங்களாகவே புதிய பயிற்சியாளரை நிர்ணயிக்கும் பணியில் இந்திய கிரிக்கெட் வாரியம் மிகத் தீவிரமாக இறங்கி செயல்பட்டது.

- Advertisement -

இந்தியா மட்டுமின்றி பல வெளிநாட்டு முன்னாள் வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது மட்டுமின்றி இறுதியாக கொல்கத்தா அணிக்கு ஆலோசிகராக செயல்பட்ட கௌதம் கம்பீரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதற்கு அது அவர் சம்மதம் தெரிவிக்க, சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற நேர்காணலில் கம்பீர் தேர்வாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் கௌதம் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு, சில அதிரடி முடிவுகளை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அது என்னவென்றால் இந்திய அணியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா மற்றும் சமி ஆகியோர் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். நட்சத்திர வீரர்களான இவர்கள், பல காலம் விளையாடியும் இந்திய அணி இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் அடுத்து வருகிற சாம்பியன் டிராபிதொடர் இவர்களுக்கு கடைசி வாய்ப்பாகவும், அதில் வெற்றி பெறவில்லை என்றால் இவர்கள் நான்கு பேரையும் அணியை விட்டு வெளியேற்றப் போவதாகவும், கம்பீர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அப்படி வெளியேற்றினால் இந்திய கிரிக்கெட் வாரியம் அதில் தலையிடக்கூடாது என்று கம்பீர் நிபந்தனை விதித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:பண்ட் நீங்க தயவு செஞ்சு இப்படிலா பண்ணாதீங்க.. விராட் ரோஹித்னால முடிலனா அடுத்து நீங்கதான்- பயிற்சியாளர் அறிவுரை

அதிரடி முடிவுகளை எடுக்கக்கூடிய கௌதம் கம்பீர் இந்த முடிவையும் எடுத்திருப்பார் என்று கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால் இது எந்த அளவு உண்மை என்றுதெரியவில்லை.ஆனால் சீனியர் வீரர்கள் என்ற அடிப்படையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக அடுத்து வரும் தொடரோடு இவர்கள் விலகிக் கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த டி20 உலக கோப்பையை கைப்பற்ற இந்திய அணியினர் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles