கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி துவங்கி நடைபெற்று வந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தது. 2023 ஆம் ஆண்டிற்கான பதினாறாவது ஆசிய கோப்பை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் வைத்து நடைபெற்றது. இந்தத் தொடரின் நான்கு ஆட்டங்கள் பாகிஸ்தானிலும் ஒன்பது ஆட்டங்கள் இலங்கையிலும் வைத்து நடைபெற்றன.
இந்தியா பாகிஸ்தான் இலங்கை பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் என ஆராணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இலங்கையின் தலைநகரான கொழும்புவில் அமைந்துள்ள பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து இந்த போட்டி நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை அணி 15.2 ஓவர்களில் 50 ரன்கள் விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் பந்துவீச்சில் முகமது சிராஜ் மிகச் சிறப்பாக பந்து வீசி 21 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் இந்தப் போட்டியின் ஒரே ஓவரில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது . இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 3 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து 51 ரன்கள் என்ற மிகக் குறைந்த இலக்கை துரத்திய இந்தியா 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. கில் 27 ரன்கள்டனும் இஷான் கிஷான் 23 ரன்கள்டனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி எட்டாவது முறையாக ஆசிய கோப்பை தொடரை வென்றிருக்கிறது. மேலும் இந்திய அணியின் ஆதிக்கம் ஆசிய கோப்பை போட்டிகளில் தொடர்ந்து வருகிறது.
23 வருடங்களுக்கு முன்பு சார்ஜாவில் நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இந்தியாவை 54 ரன்கள் செய்தது. தற்போது இந்தியா 50 ரன்கள் இலங்கையை ஆல் அவுட் செய்திருப்பதன் மூலம் அந்தத் தோல்விக்கு பலி தீர்த்துக் கொண்டதாக ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். ஆசியக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக முகமது சிராஜ் தேர்வு செய்யப்பட்டார். மேலும் தொடர் நாயகன் விருதை குல்தீப் யாதவ் தட்டி சென்றார்.
இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற பின் பேசிய முகம்மது சிராஜ் ” இந்தத் தொடரில் சிறப்பாக பந்து வீசினேன் ஆனால் ஆரம்பப் போட்டிகளில் எனக்கே விக்கெட் கிடைக்கவில்லை. இன்றைய தினம் எனது பந்து வீச்சிக்கான பலன் நன்றாக கிடைத்து இருக்கிறது. இந்த ஆடுகளத்தில் போட்டியின் துவக்கத்தில் சீம் இருந்தது. இன்றைய தினம் நன்றாக ஸ்விங் ஆனது. அதனால் பெரும்பாலான பந்துகளை புல்லர் லென்த்தில் வீச முயற்சி செய்தேன். அதற்கு நல்ல பலனும் கிடைத்தது” என தெரிவித்திருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் “வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இடையே நல்ல புரிந்துணர்வு இருப்பது அணியின் வெற்றிக்கு முக்கியமான ஒரு காரணம் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஆட்டநாயகன் விருதிற்காக தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை கொழும்பு பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தின் கிரவுண்ட் பராமரிப்பாளர்களுக்கு கொடுப்பதாக தெரிவித்தார். அவர்கள் கடின உழைப்பினால் தான் இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நல்லபடியாக முடிந்திருக்கிறது என தெரிவித்த அவர். அவர்கள் இல்லை என்றால் பெரும்பாலான போட்டிகள் நடைபெற சாத்தியமே இருந்திருக்காது என தெரிவித்தார்.

