இவங்க இன்னும் திருந்தல மாமா.. விட்ட இடத்திலேயே மறுபடியும் ஆரம்பித்த சிஎஸ்கே.. 15 வயது சிறுவன் அதிரடி.. சிஎஸ்கேவை பதம் பார்த்த ராஜஸ்தான்.. ஐபிஎல் 2026

தற்போது நடைபெற்று முடிந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான 19 ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருக்கிறது. கௌகாத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

- Advertisement -

அதன்படி பேட்டிங் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் 6 ரன்னில் வெளியேற கேப்டன் ருத்ராஜ் 6 ரன்னில் நடையை கட்டினார். அவருக்குப் பிறகு வந்த ஆயுஷ் மாத்ரே முதல் பந்திலையே டக் அவுட் ஆகி வெளியேற, அதற்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிவை நோக்கி செல்ல ஆரம்பித்தது. இறுதியில் ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டன் மட்டும் ஓரளவு நன்றாக விளையாட சிஎஸ்கே 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியில் 15 வயது அதிரடி துவக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்சி சிஎஸ்கே பவுலர்களை அடித்து நொறுக்கினார். வெறும் 17 பந்துகளை எதிர் கொண்ட அவர் 4 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸ் என 52 ரன்கள் குவித்து ராஜஸ்தான் அணியை எளிதாக வெற்றி பெற வைத்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 12.1 ஓவரில் இரண்டு விக்கெட் மட்டுமே இழந்து 128 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. கடந்த சீசனில் படுதோல்விகளை சந்தித்து கடைசி இடத்தைப் பிடித்த சிஎஸ்கே இந்த முறையும் அதேபோல ஆரம்பித்து இருப்பது ரசிகர்களை சற்று பதட்டம் அடைய வைத்திருக்கிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles