சஞ்சு சாம்சன் சிஎஸ்கே கேப்டன் ஆவதாக பரவிய செய்தி.. உண்மையை உடைத்து அஸ்வின் பதிலடி.. நடந்தது என்ன.?

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அனைத்து அணிகளும் எந்த வீரர்களை எடுப்பது என்பது தொடர்பாக தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான பல்வேறு செய்திகளும் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது .

- Advertisement -

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் மகேந்திர சிங் தோனி வருகின்ற ஐபிஎல் தொடரோடு ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஐபிஎல் தொடரில் அவர் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களின் அன்பிற்காக மீண்டும் ஒரு ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என தெரிவித்திருந்தார்.

- Advertisement -

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த வருட ஐபிஎல் தொடரில் தோனியை மீண்டும் தக்க வைத்திருக்கிறது. மகேந்திர சிங் தோனி இந்த வருடத்துடன் ஓய்வு பெற்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக யார் இருப்பார் என்று கேள்வி அனைவரிடமும் நிலவி வருகிறது கடந்த ஐபிஎல் ஏலத்தின் போது டோனி ஓய்வு பெற்ற பிறகு அணியை வழிநடத்துவதற்கு இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்சை தேர்ந்தெடுத்தனர் . அவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்பதால் மீண்டும் அவரை விடுவித்து இருக்கிறது சிஎஸ்கே.

- Advertisement -

தோனியின் ஓய்வுக்குப் பிறகு சிஎஸ்கே அணி அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கும். இந்தக் கேள்விதான் கிரிக்கெட் ரசிகர்கள் முதல் விமர்சகர்கள் வரை அனைவருக்கும் எழுந்திருக்கிறது. இந்நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை தொடர்பு கொண்டதாகவும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்த ஒருவர் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வினின் பெயரை குறிப்பிட்டு சிஎஸ்கே அணியின் நிர்வாகம் சஞ்சு சாம்சனை தொடர்பு கொண்டு தோனிக்கு பிறகு சென்னை அணிக்கு கேப்டனாக இருப்பதற்கு கேட்டுக் கொண்டதாகவும் அதனை சஞ்சு சாம்சன் மறுத்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் வரும் காலத்தில் இது சாத்தியப்படலாம் எனவும் அவர் பதிவு செய்திருந்தார்.

- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது பெயரை குறிப்பிட்டு இந்த செய்தி வெளியாகியிருந்ததால் இதற்கு பதில் அளித்து இருக்கிறார். இது தொடர்பாக பதிவு செய்திருக்கும் அஸ்வின் வேலை குறிப்பிட்டு இருக்கும் செய்தி பொய்யான செய்தி என்றும் நான் இது போன்ற பொய்யான செய்திகள் எதையும் தெரிவிக்கவில்லை எனவும் பதிலடி கொடுத்திருக்கிறார். மேலும் பொய்யான செய்திகளில் தனது பெயரை குறிப்பிட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

நீண்ட காலமாகவே கிரிக்கெட் பற்றிய விவாதங்களையும் கருத்துக்களையும் எனது யூடியூப் சேனல் மூலமாக ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார் அஸ்வின். மேலும் ஐபிஎல் போட்டிகள் குறித்தும் வீரர்களின் ஏலம் குறித்தும் தனது பார்வையையும் தனது அனுபவங்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். இது கிரிக்கெட் ரசிகர்களிடம் குறிப்பாக தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இன்னும் சில நேரங்களில் அவரது பெயரை பயன்படுத்தி இது போன்ற பொய் செய்திகளும் வருகின்றன. அவற்றிற்கும் தக்க முறையில் பதிலடி கொடுத்து வருகிறார் அஸ்வின்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles