இந்தியாவில் 17வது ஐபிஎல் தொடர் தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரை சுவாரஸ்யப்படுத்தும் வகையிலும் ராஜஸ்தான் மக்களின் நலனில் அக்கறை கொண்டும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ஒரு சிறப்பான செய்தி அறிவித்திருக்கிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டி நாளை ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக இரு அணிகளும் இப்போட்டிக்கு மிகத் தீவிரமாகத் தயாராகி வருகின்றனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங், பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் வலுவாக இருக்கிறது மேலும் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் வலுவாக இருக்கிறது. விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் மூன்று தோல்விகளை பெற்று புள்ளி பட்டியலில் தற்போது எட்டாவது இடத்தில் இருக்கிறது.
இதனால் பெங்களூர் அணியை பொறுத்தவரை இந்த வெற்றி என்பது மிகவும் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும், பெங்களூர் அணி சொதப்பி வருவதால் நாளைய போட்டிக்கு முன்பாக இதனை கவனத்தில் கொண்டு அதற்குத் தகுந்தவாறு மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியம்.
இந்த நிலையில் போட்டி நாளை ராஜஸ்தான் மைதானத்தில் நடைபெற இருப்பதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ஒரு சிறப்பான செய்தியை அறிவித்திருக்கிறது. அதாவது இரு அணிகளும் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் ராஜஸ்தானில் உள்ள மக்களுக்கு ஆறு வீடுகளுக்கு சோலார் சூரிய மின்சக்தி உபகரணம் வழங்கப்படுவதாக அறிவித்திருக்கிறது. அதாவது இந்த போட்டியில் இரண்டு அணிகளும் சேர்த்து எவ்வளவு சிக்சர்களை அடிக்கிறதோ அதற்கு தகுந்தவாறு ராஜஸ்தானில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் உபகரணம் வழங்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
மேலும் ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகளில் பலமான பேட்டிங் வரிசை இருப்பதாலும், பெங்களூரு அணியில் ரன்களை வாரி வழங்கும் பந்துவீச்சாளர்கள் இருப்பதாலும், இப்போட்டியில் அதிக சிக்ஸர்கள் பறப்பது ஏறக்குறைய உறுதியாக இருக்கிறது. இது ராஜஸ்தான் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையிலேயே அமைந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க:இவர்தாங்க ரொம்ப டேஞ்சர்.. களத்துல இருந்தா ஒண்ணுமே பண்ண முடியாது .. தோல்விக்கான காரணத்தை விளக்குகிறார் கம்மின்ஸ்
மேலும் பெண்களை கவுரவிக்கும் வகையில் நாளை ராஜஸ்தான் அணி வீரர்கள் முழுவதும் பிங்க் சீருடை அணிந்து போட்டியில் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பசுமை திட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் குறிப்பிட்ட போட்டிகளில் பச்சை நிற ஜெர்சியை அணிந்து விளையாடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே போல வித்தியாசமான செயல்முறைகளை மற்ற அணிகளும் அறிவித்தால் நன்றாக இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

