டீ சொல்லி வர்றதுக்குள்ளையா.?. கொத்தாக சரியும் இந்திய அணியின் விக்கெட்டுகள்.. இந்தியா தென் ஆப்பிரிக்கா 2வது டெஸ்ட்

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் முதலில் தொடங்கிய இந்திய அணி தொடக்க இரண்டு விக்கெட் விழுந்த பிறகு தடுமாற்றமான முறையில் விளையாடி வருகிறது.

- Advertisement -

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் முதல் இன்னிங்ஸ் விளையாடிய தென்னாபிரிக்க அணி 489 ரன்கள் குறித்து ஆட்டம் இழக்க, அதற்குப் பின்னர் முதல் இன்னிங் துவங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் விக்கெட் இழப்பின்றி இருந்தது. இதற்க்கு பின்னர் மூன்றாம் நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்ற வரும் நிலையில் முதலில் கே எல் ராகுல் 22 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

அதற்கு பிறகு ஜெய்ஸ்வால் 58 ரன் எடுத்த வெளியேற, அதற்குப் பிறகு இந்திய அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுகள் போல சரியாக ஆரம்பித்தன. உணவு இடைவெளிக்கு முன்பு வரை இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. அதாவது உணவு இடைவெளிக்கு முன் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழந்திருக்கிறது என்பதை டீ சொல்லி வருவதற்குள் இந்திய அணியின் ஆட்டமே முடிந்து விடும் போல என்பது போல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles