அடித்து நொறுக்கிய இந்தியா.. அபிஷேக் ஷர்மா அபார சதம்.. ஜிம்பாப்வே அணிக்கு மிகப்பெரிய ரன்கள் இலக்கு

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி ஜிம்பாப்வேவிற்கு மிகப்பெரிய ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்திருக்கிறது.

- Advertisement -

இதில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாடி சதம் விளாசி இருக்கிறார். இறுதியில் ரிங்கு சிங் மற்றும் ருத்ராஜ் ஆகியோர் அதிரடியாக விளையாடி சவாலான ஸ்கோரை நிர்ணயித்திருக்கின்றனர்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் கில் விரைவிலேயே வெளியேறினாலும், அதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த ருத்ராஜ் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி ஜிம்பாவேவின் பந்து வீச்சை முதலில் நிதானமாக விளையாடிவிட்டு பின்னர் வெளுத்து வாங்கியது. அதிலும் அபிஷேக் ஷர்மா பவுண்டரிகளும், சிக்ஸர்களும் ஆக வெளுத்து வாங்கினார்.

- Advertisement -

33 பந்துகளில் அரை சதம் அடித்த நிலையில் 46 பந்துகளில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். ஏழு பவுண்டரிகளும், எட்டு சிக்ஸர்களும் என அதிரடியாக விளையாடியிருக்கிறார். ருத்ராஜ் மற்றும் அபிஷேக் ஷர்மா ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 76 பந்துகளில் 137 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் நூறு ரன்கள் குவித்த போது அபிஷேக் ஷர்மா எதிர்பாராதவிதமாக ஆட்டம் இழக்க அதற்குப் பிறகு ருத்ராஜ் உடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சை இறுதி கட்டத்தில் வெளுத்து வாங்கியது. ருத்ராஜ் 47 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் என 77 ரன்கள் குவித்தார். மற்றொரு ஆட்டக்காரரான ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்கள் என 48 ரன்கள் குவித்தார். இந்த ஜோடி 36 பந்துகளில் 87 ரன்கள் குவித்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை இந்திய அணிக்கு அமைத்தது.

- Advertisement -

இறுதியாக இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 234 ரன்கள் குவித்தது. இதில் குறிப்பாக ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சாளர் ஜான்வே நான்கு ஓவர்களில் 53 ரன்கள் விட்டுக் கொடுத்தார். கேப்டன் சிக்கந்தர் ராசா மூன்று ஓவர்களில் 34 ரன்களும், மையர்ஸ் ஒரே ஓவரில் 28 ரன்கள் கொடுத்தனர்.

இதையும் படிங்க:முதல் போட்டியில் 0.. 2வது போட்டியில் 100.. ஜிம்பாவேயை வெளுத்து வாங்கி அபிஷேக் ஷர்மா.. 46 பந்தில் சதம்

முதல் போட்டியில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான தோல்விக்கு இந்திய அணி மிகப்பெரிய இலக்கை ஜிம்பாப்வே அணிக்கு நிர்ணயித்திருக்கிறது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் இந்திய அணி இரண்டாவது போட்டியில் நிச்சயம் வெற்றி பெற முயற்சிக்கும். இருப்பினும் ஜிம்பாப்வே அணியும் தரமான பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இந்தப் போட்டி ரசிகர்களுக்கு சுவாரசியமாக அமையும் என்பதில் பஞ்சமில்லை. தற்போது இரண்டாவது இன்னிங்ஸ் ஜிம்பாப்வே அணி விளையாட இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles