கேட்டாலே தல சுத்துதே.. ஆர்சிபியின் புது ஜெர்சி விலை வெளியீடு.. நம்பவே முடியாத ரசிகர்கள்

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் வருகிற வெள்ளிக்கிழமை கோலாகலமாக தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகி வரும் நிலையில் இரு அணி ரசிகர்களும் மைதானத்திற்கு வரத் தயாராகி வருகின்றனர்.

- Advertisement -

ஐபிஎல் திருவிழா இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், இதற்கான தொடக்க நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இதன் முதல் போட்டி சென்னை அணியின் அடையாளமாக கருதப்படும் தோனி அணியும், பெங்களூர் அணியின் அடையாளமாக கருதப்படும் விராட் கோலி அணியும் களத்தில் மோதுகின்றன.

- Advertisement -

இதற்காக தற்போது இரு அணி வீரர்களும் சென்னை வந்தடைந்துசேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க, போட்டியைக் கண்டுகளிக்க சென்னை, பெங்களூர் மற்றும் அதன் அதன் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து வரும் ரசிகர்கள் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு பக்கத்திலேயே அறைகள் எடுத்து தங்கி, போட்டி நடைபெறும் நேரத்திற்கு சரியாக வந்து விடுவார்கள்.

- Advertisement -

இது மட்டுமில்லாமல் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான அணிகளின் ஜெர்சி, தொப்பி, விசில் மற்றும் சில பதாகைகள் என்று மைதானத்திற்குள் எடுத்து வந்து அரங்கத்தையே கோலாகலப் படுத்துவார்கள். இது சென்னை மைதானத்திற்கு மட்டுமல்ல இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் போட்டிகள் நடைபெறுகிறதோ அம்மாநில ரசிகர்கள் அனைவரும், இதனையே வழக்கமாக பின் தொடர்வார்கள்.

இந்த ரசிகர்கள் அணியும் ஜெர்சிகள் அனைத்தும் அணி வீரர்கள் அணியும் ஜெர்சிகள் போல் ஒரிஜினல் இல்லை என்றாலும், அதே வடிவத்தில் மலிவு விலையில் வாங்கி தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவார்கள். எனவே அணி வீரர்கள் அணியும் ஒரிஜினல் ஜெர்சியை வாங்க விரும்பும் ரசிகர்களுக்கு, ஒரு நற்செய்தியாக ஆர்சிபி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

- Advertisement -

பெங்களூர் அணி ஜெர்சியை வாங்க விரும்பும் ரசிகர்கள் ‘புமா’ நிறுவனத்தின் இணையதள வாயிலாக சென்று ஒரிஜினல் தரமான ஜெர்சிகளை வாங்கிக் கொள்ளலாம். இந்த ஜெர்சியின் விலையாக ரூபாய் 4999 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே தேவைப்படும் ரசிகர்கள் இந்த தொகையினை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால் இந்த ஜெர்ஸியின் விலையைக் கண்ட ரசிகர்கள் சற்று கலக்கத்தில்தான் இருக்கின்றனர் என்று சொல்ல வேண்டும். ஐபிஎல் டிக்கெட் கூட இவ்வளவு விலை இருக்காதே ஒரு சாதாரண ஜெர்சிக்கு இவ்வளவு விலையா?, கேட்டாலே தலை சுத்துதே என்பது போன்ற மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகின்றன.

இதே போல மற்ற அணிகளின் ஜெர்சிகள் வாங்குவதற்கான அறிவிப்பு சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்ந்த மற்ற உபகரணங்களும் ‘புமா’ இணையதளத்தின் வாயிலாகவே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சென்னை மற்றும் பெங்களூர் ரசிகர்கள் நிரம்பி வழிகிற இந்த போட்டி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் கிரிக்கெட் பார்வையாளர்களுக்கும் அனல் பறக்கும் போட்டியாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles