தப்பு பண்ணாதீங்க.. வருண் சக்கரவர்த்தி அதுக்கு சரிப்பட்டு வர மாட்டாரு.. அவர கூட்டிட்டு வாங்க – சுரேஷ் ரெய்னா பேட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் வருண் சக்கரவர்த்தி வாய்ப்பு பெற்று விளையாடினார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட வேண்டுமா? அல்லது இல்லையா? என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

டி20 கிரிக்கெட்டில் ஸ்பெசலிஸ்ட் பந்துவீச்சாளராக திகழும் வருண் சக்கரவர்த்தி இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா காயம் அடைந்திருக்கும் நிலையில் அவருக்கு பதிலாக விக்கெட்டுகள் வீழ்த்தக் கூடிய ஒரு முன்னணி வீரர் தேவைப்படுகிறது. இதன் காரணமாக கௌதம் கம்பீர் வருண் சக்கரவர்த்தியை ஒருநாள் தொடரிலும் அறிமுகப்படுத்தினார்.

- Advertisement -

ஏனென்றால் அவர் அதிகமான ஒரு நாள் போட்டிகளில் விளையாடாத காரணத்தால் அவரை முன்னணி அணிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட வைக்க முடியும் என்ற திட்டத்தில் இருப்பதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக குல்தீப் யாதவ் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட வேண்டும் என்று அதற்கான காரணங்கள் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “வருண் சக்கரவர்த்தி டி20 கிரிக்கெட்டில் பந்துவீசி பழகிவிட்டார் என்று நினைக்கிறேன். அதே சமயத்தில் குல்தீப் யாதவ் தனது பந்துவீச்சில் நிறைய வேரியேஷன்கள் வைத்திருக்கிறார். மேலும் விக்கெட் வீழ்த்தும் திறன் அவரிடம் நிறைய இருக்கிறது. மேலும் பெரிய போட்டிகளில் வெற்றி பெறக்கூடிய வீரராக குல்தீப் யாதவ் இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க:எனக்குனே வருவீங்களா.. 13வது முறை.. ஜோரூட்டை வீழ்த்தி சாதனை படைத்த ஜடேஜா.. பும்ராவுடன் இணைந்து அசத்தல்

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் அவர் பாபர் அஸ்ஸாமின் விக்கெட்டை வீழ்த்திய விதம் எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது. மேலும் அவரது கையில் வித்தியாசமான திறமை உள்ளது. அவர் பெரிய போட்டிகளில் பெரிய விஷயங்களை செய்யக்கூடிய வீரராக இருக்கிறார். எனவே வருகிற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர்தான் நிச்சயமாக விளையாட வேண்டும்” என்று சுரேஷ் ரெய்னா கூறி இருக்கிறார். குல்தீப் யாதவ் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் விளையாடிய நிலையில் அவருக்கு பதிலாக அடுத்த போட்டியில் வருண் சக்கரவர்த்தி விளையாடினார். எனவே மூன்றாவது போட்டியில் வருண் தொடர்ந்து விளையாடுவாரா அல்லது குல்தீப் யாதவ் திரும்ப வாய்ப்பு பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஏற்கனவே இந்திய அணி தொடரை கைப்பற்றி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles