இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 304 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக எட்டிப்பிடித்து வெற்றி பெற்றுள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா ஜோ ரூட் விக்கெட் வீழ்த்தி சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.
இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் சால்ட் 26 ரன்கள் எடுத்து வெளியேற, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கட் 65 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். மேலும் அவரைத் தொடர்ந்து களம் இறங்கிய ஜோ ரூட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் பந்துவீச்சை சாமர்த்தியமாக எதிர்கொண்டு விளையாடினார்.
72 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் குவித்தார். இதன் மூலமாக ஜோ ரூட் தனது 40 வது அரை சதத்தை பதிவு செய்து அதிக அரை சதங்கள் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் படைத்தார். 69 ரன்கள் எடுத்திருந்தபோது ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து ஜோ ரூட் வெளியேறி இருக்கிறார். ஒரு முனையில் சாதனை படைத்த ஜோ ரூட் வெளியேற மறுமுனையில் அவரது விக்கெட்டை வீழ்த்தி ஜடேஜா மற்றொரு சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.
ஜோ ரூட்டை ரவீந்திர ஜடேஜா ஏற்கனவே 12 முறை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போட்டியில் ஒரு முறை வீழ்த்தியதோடு மொத்தமாக 13 முறை அவரது விக்கெட்டை எடுத்து இருக்கிறார். இதன் மூலமாக ஏற்கனவே அவரை 13 முறை வீழ்த்திய பும்ராவின் சாதனையோடு இவரின் சாதனையை இணைத்து இருக்கிறார். மேலும் ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் இவரை 14 முறை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சிலிர்த்து போய் சில்லறைலாம் விட்டோம்.. இந்த 5 ரன்னுக்கா இவ்வளவு சீனு.. ரெக்கார்டையும் மிஸ் செய்த விராட் கோலி
இங்கிலாந்து அணி இறுதியில் 49.5 ஓவர்களில் 304 ரன்கள் குவிக்க, அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவின் அபார சதத்தின் உதவியோடு 308 ரன்கள் குவித்து சிறப்பான வெற்றியை பதிவு செய்ததோடு தொடரையும் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 119 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தார்

