2 சிக்ஸ் 5 ஃபோர்ஸ்.. சின்ன தல இஸ் பேக்.. ரெய்னா மீண்டும் மஞ்சள் சட்டையில் மாஸ் பேட்டிங்.. ஓய்வை அறிவிக்காமல் இருந்திருக்கலாமோ.?

கிரிக்கெட் விளையாட்டில் இருந்து முற்றிலுமாக ஓய்வு பெற்ற வீரர்களுக்காக லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போட்டிகள் இந்தியா உட்பட பல்வேறு வெளிநாடுகளிலும் நடத்தப்படுகிறது. தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரில் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 5 அணிகள் பங்குபெறும் இந்த போட்டி தொடரில் சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், யூசுப் பதான், அம்பத்தி ராயுடு மற்றும் ஷேன் வாட்சன் போன்ற முன்னாள் சர்வதேச மற்றும் ஐபிஎல் நட்சத்திரங்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் அதிரடி ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களை முந்தைய கால நினைவிற்கு அழைத்துச் சென்றிருக்கிறது. தோயம் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் சுரேஷ் ரெய்னா மஞ்சள் நிற ஜெர்சியில் விளையாடியது அவர் சிஎஸ்கே அணிக்கு விளையாடுவது போன்ற இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

- Advertisement -

நேற்று நடைபெற்ற போட்டியில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான தோயம் ஹைதராபாத் அணியும் ஷிகர் தவான் தலைமையிலான குஜராத் கிரேட்ஸ் அணியும் மோதியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய ஹைதராபாத் அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தனர். முன்னாள் சிஎஸ்கே வீரர் ஷேன் வாட்சன் 17 ரன்னிலும் மற்றொரு துவக்க வீரரான ஒர்க்கர் 13 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

- Advertisement -

இவர்களைத் தொடர்ந்து முன்னால் ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்க்ஸ் 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து களத்திற்கு வந்த ரிக்கி கிளார்க் 15 ரன்னில் அவுட் ஆனார். இதனால் சுரேஷ் ரெய்னாவின், தோயம் ஹைதராபாத் அணி 82 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. இந்நிலையில் களத்திற்கு ஆட வந்த சுரேஷ் ரெய்னா முன்னர் சிஎஸ்கே அணிக்கு ஆடியது போன்ற அதிரடியான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ரெய்னா 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

சுரேஷ் ரெய்னா மீண்டும் மஞ்சள் ஜெர்சியில் விளையாடியது அவர் சிஎஸ்கே அணிக்கு விளையாடிய காலங்களை ரசிகர்களுக்கு ஞாபகப்படுத்தியது. குறிப்பாக ஆட்டத்தின் பத்தாவது ஓவரை ஜான் முனி வீசியபோது அந்த ஓவரில் 1 சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகள் அடித்து தனது அதிரடி வேட்டையை தொடங்கினார் சுரேஷ் ரெய்னா. இவரது அதிரடியால் தோயம் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து விளையாட வந்த குஜராத் க்ரேட்ஸ் அணியினர் 19.3 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து இலக்கை எட்டினர். அந்த அணியின் துவக்க வீரராக களம் இறங்கிய முன்னாள் தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் வான் வீக் அதிரடியாக விளையாடி சதம் எடுத்தார். 69 பந்துகளை சந்தித்த அவர் 9 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 115 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். இவருக்கு உறுதுணையாக ஆடிய கேப்டன் தவான் 21 ரன் எடுத்து அவுட் ஆனார். மேலும் அந்த அணியின் வீரர் லெண்டில் சிமென்ஸ் 21 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இறுதியில் வான் வீக் மற்றும் யஸ்பால் சிங் ஆகியோர் தங்களது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய வான் வீக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்தப் போட்டியின் போது சிஎஸ்கே ரசிகர்கள் மற்றும் இந்திய ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த சுரேஷ் ரெய்னாவின் பேட்டிங் வீடியோ இந்தப் பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles