நேற்று டி20 உலக கோப்பை தொடரில் அமெரிக்க அணியிடம் இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட முயற்சி செய்து 77 ரன்னுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்தார்கள். கடைசியாக கேப்டன் சூரியகுமார் யாதவ் கொஞ்சம் பொறுமையாக விளையாடி கடைசியில் அதிரடி காட்டியதால் இந்திய அணி 161 ரன்கள் சேர்த்து தப்பித்தது. இல்லையென்றால் நடப்பு உலகக் சாம்பியன் இந்திய அணி கத்துக்குட்டி அமெரிக்காவிடம் தோல்வி அடைந்திருக்கும்.
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் பேசும்பொழுது ” நீங்கள் முதல் பந்தில் இருந்து அதிரடியாக மட்டுமே விளையாடுவீர்கள் என்றால் அது உங்களுக்கு சரியாக வராது. நீங்கள் பவர் பிளேவில் முதல் நான்கு விக்கெட்டுகளை இழந்து விட்டீர்கள் என்றால் நீங்கள் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்று தான் அர்த்தம். உங்களை நீங்களே அப்படியான ஒரு கடினமான சூழ்நிலையில் வைத்துக் கொள்ள விரும்ப மாட்டீர்கள் என்று நம்புகிறேன்”
“பொதுவாக உலகக்கோப்பை என்று வரும் பொழுது பெரிய அணிகள் எல்லாமே தங்களின் செயல் திறனை பெரிய அளவில் மாற்றிக் கொள்ளும். ஏனென்றால் உலகக்கோப்பை என்பது தினமும் நடக்க கூடியது கிடையாது. அதனால் அவர்கள் சிறப்பாக தயாராகி வருவார்கள். மேலும் நல்ல திறமையும் டி20 உலக கோப்பை அனுபவமும் கொண்ட பெரிய அணிகளிடம் நீங்கள் இப்படி விளையாடினால் சிக்கிக் கொண்டு தோல்வியடைவீர்கள்” என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.

