இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஓரளவு நன்றாக விளையாடி ஃபாலோ ஆனை தவிர்த்து இருக்கிறது. இதற்கு இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்த சூழ்நிலையில் கேஎல் ராகுலுக்கும் மற்ற வீரர்களுக்கும் இடையேயான வித்தியாசம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இதில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு தனது முதல் இன்னிங்ஸ் துவங்கிய இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் குவித்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டு மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் தொடங்கிய நான்காவது நாள் ஆட்டத்தில் கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் சிறப்பாக விளையாடி இந்திய அணியை மீட்டெடுத்தனர்.
இதில் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் 139 பந்துகளை எதிர்கொண்டு 84 ரன்கள் குவித்தார். அவருக்கு சரியான பார்ட்னர்ஷிப் அமைத்த ஜடேஜா 77 ரன்கள் குவித்தார். இந்த நிலையில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு சரியான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்த கேஎல் ராகுல் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “கேஎல் ராகுல் எப்போதுமே ஆடுகளத்தில் வலிமையாக இருக்கிறார். ஆடுகளத்தில் அவர் தலை எப்போதும் மேலே நிமிர்ந்தே இருக்கிறது. இதனால் ஆஃப் ஸ்டம்ப் எங்கே இருக்கிறது என தீர்மானிக்கவும், அடுத்த பந்து எப்படி வரப்போகிறது என்பதை கணிக்கவும் அவரால் எளிதாக முடிகிறது. இதன் காரணமாக அவரால் பந்தை விட்டு எளிதாக விலக முடியும். பந்து புதிதாக இருக்கும் போது எப்போதுமே பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க:ஸ்டார்க் பந்துல இதை செய்ய முடியாது.. ஜெய்ஸ்வால்கிட்ட யாராச்சும் சொல்லுங்க – புஜாரா பேட்டி
எனவே அதற்கு மதிப்பு கொடுத்து முதல் 45 நிமிடம் அமைதியாக இருந்தால் அடுத்த ஐந்து மணி நேரம் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கமாகத்தான் இருக்கும். இதைத்தான் கேஎல் ராகுல் தற்போது செய்து வருகிறார். மேலும் இதனை சிறப்பாக செய்து மற்ற பேட்ஸ்மேன்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார்” என்று சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார். தற்போது தனது முதல் இன்னிங்ஸ் விளையாடி வரும் இந்திய அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் குவித்துள்ளது.

