ஸ்டார்க் பந்துல இதை செய்ய முடியாது.. ஜெய்ஸ்வால்கிட்ட யாராச்சும் சொல்லுங்க – புஜாரா பேட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரஸ்பேனில் உள்ள கபா மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தோல்வியை தவிர்க்க இந்திய அணி தற்போது போராடி வருகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் டெஸ்ட் வீரரான புஜாரா ஜெய்ஸ்வால் குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆகி வெளியேறிய ஜெய்ஸ்வால் அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் அடித்திருந்தார். ஆனால் அதற்குப் பிறகு நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவரது பேட்டிங் அணுகுமுறை சுமாராகவே இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாட போய் தனது விக்கட்டை பறி கொடுத்த நிலையில் இந்திய அணியின் டெஸ்ட் வீரரான புஜாரா ஜெய்ஸ்வாலுக்கு சில அறிவுரைகளை கூறியிருக்கிறார். அதாவது ஆஸ்திரேலியா மாதிரியான வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் முதலில் பொறுமை காக்க வேண்டியது அவசியம் என்று கூறி சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ஆஸ்திரேலியாவில் புதிய பந்தில் எளிதாக டிரைவ் செய்து ரன்கள் அடிக்க முடியாது என்பதை ஜெய்ஸ்வாலிடம் யாராவது சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் டிரைவ் மூலமாக எளிதாக சில ரன்கள் அடிக்க முடியும் என்று நினைக்கிறார். ஆனால் அங்கு புதிய பந்தில் இதுபோன்ற செய்வது அவ்வளவு எளிது இல்லை என்பதை உணர வேண்டும். ஆனால் நீங்கள் அப்படி விளையாட வேண்டும் என்றால் உங்கள் உடல் அருகில் பந்து இருக்க வேண்டியது முக்கியம்.

- Advertisement -

இதையும் படிங்க:2 நாள் 16 விக்கெட்.. மழைய நினச்சு சந்தோஷப்படாதீங்க.. இப்படி ஒரு விஷயம் இருக்கு.. நாங்க பண்ண போறது இதுதான் – ஆஸ்திரேலிய மிட்செல் ஸ்டார்க் அதிரடி பேட்டி

உதாரணமாக கேஎல் ராகுல் விளையாடுவதை பாருங்கள். அவரைப் போன்று ஆடுவது நல்லது. எனவே இந்த மனநிலையை மாற்றி விளையாட வேண்டியது முக்கியம் டெஸ்ட் கிரிக்கெட்டில் எல்லா பந்தையும் அடித்து ஆட வேண்டும் என்று நினைக்க கூடாது. எதை அடிக்க வேண்டும் எதை விட வேண்டும் என்ற பக்குவம் நிச்சயமாக வேண்டும். ஸ்டார்க் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவரது கட்டுப்பாடு இதில் தெளிவாக இருப்பதால் அற்புதமாக செயல்படுகிறார்” என்று கூறி இருக்கிறார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles