ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வருகிறது. 1-1 என்ற சமநிலையை இரண்டு அணிகளும் பெற்று வந்த நிலையில், மூன்றாவது போட்டியானது காபா நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மூன்றாவது நாள் ஆட்டம் மழையால் முடிவடைய, இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்துள்ளது.
4 மற்றும் 5 நாட்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், 4ஆம் நாள் தொடக்கத்தில் இந்தியாவை அவுட்டாக்கினால் ஃபாலோ-ஆனை அமல்படுத்த ஆஸ்திரேலியா முயற்சிக்கும். மூன்றாவது டெஸ்டில், ஃபாலோ-ஆனைத் தவிர்ப்பதற்கு இந்தியா 194 ரன்கள் வித்தியாசத்தில் உள்ளது. அதனை தடுக்க இந்திய அணி போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், “4-வது நாள் காலை நேரம் சென்று கொண்டே இருந்தால், ஃபாலோ-ஆனை அமல்படுத்துவது பற்றி இருமுறை யோசிக்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்.
அந்தப் பிளானை நாங்கள் பயன்படுத்துவோம்:
ஸ்டார்க் ஏசிபி ரேடியோவுக்கு கொடுத்த பேட்டியில் கூறியதாவது, “நாம் அவர்களுக்கு எதிராக வெற்றிகரமாக சில கூடுதல் வாய்ப்புகளை வைத்துள்ளோம். நாளை (செவ்வாய்) தான் என்ன நடக்கப் போகிறது என தெரியும், நாங்கள் பந்தை சரியான இடங்களில் வீசி மற்றும் சில தொடக்க விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். இப்படி நடந்தால் ஆஸ்திரேலியா அணி வெற்றிக்கான சில வாய்ப்புகளை இன்னும் அதிகரிக்கலாம்” என கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணி ஃபாலோ-ஆனைச் செயல்படுத்தி, ஒரே ஒரு முறை மட்டுமே வென்றது. பேட் கம்மின்ஸ் கேப்டனாக இருந்த காலத்தில் ஐந்து முறை ஃபாலோ-ஆன்களைச் செயல்படுத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இருப்பினும், அவர் ஒருமுறை மட்டுமே ஃபாலோ-ஆனை அமல்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

