விராட் கோலி செய்வது குழந்தைத்தனமா இருக்கு.. நிதீஷ் குமார் ரெட்டிக்கு செஞ்சத ஏன் அவருக்கு செய்யல – சுனில் கவாஸ்கர் கேள்வி

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் அனைவரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தால் அறிவுறுத்தப்பட்டது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ரோஹித் சர்மா மற்றும் சில இந்திய வீரர்கள் ரஞ்சித் தொடர்களில் பங்கேற்று வரும் நிலையில் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் விலகி இருப்பது குறித்து சுனில் கவாஸ்கர் தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் என இரண்டிலும் தொடர்ச்சியான தோல்வியை சந்தித்து பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய வீரர்கள் அனைவரும் உள்நாட்டுத் தொடர்களில் பங்கு பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ரோகித் சர்மா, கில் மற்றும் ரிஷப் பண்ட் போன்ற ஸ்டார் வீரர்கள் உள்நாட்டுத் தொடரில் விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

ஆனால் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் தங்களுக்கு கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் காயம் இருப்பதாக கூறி ரஞ்சித் தொடரில் இருந்து விலகிய நிலையில் வருகிற 30ம் தேதி விராட் கோலி ரஞ்சித் தொடரில் பங்கேற்பார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் விராட் கோலி பங்கு பெறாததைக் கண்டித்து இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “தமக்கு காயம் அடைந்திருப்பதாக கூறி மருத்துவர்கள் இடமிருந்து மருத்துவ சான்றிதழ் வாங்குவது என்பது குழந்தைத்தனமான ஒரு விஷயம். நிஜமாகவே காயம் அடைந்திருந்தால் உடனடியாக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்ற பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அங்கு இருக்கும் மருத்துவ குழுவினரை நாடி உடல் தகுதியை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு இருக்க வேண்டும். நிதீஷ் குமார் ரெட்டிக்கு காயம் ஏற்பட்டவுடன் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பப்பட்டது போல விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் உடனடியாக அங்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க:அவர் என்னை எப்படி அப்படி பேசலாம்.. பிசிசிஐயிடம் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரை புகார் அளித்த ரோகித் சர்மா..

பிசிசிஐயால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கும் வீரர்களின் நடைமுறை என்பது இதுதான். தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள மருத்துவர்கள் வீரர்களை பரிசோதித்து உடல் தகுதியோடு இருக்கிறார்களா? இல்லையா? என்பது குறித்து சான்றிதழ் அளிப்பார்கள். இந்த நிலையில் சில வீரர்கள் காயம் குறித்து ஏன் தேசிய கிரிக்கெட் அகாடமியில் செல்லவில்லை. இதுகுறித்து பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும். ரோகித் சர்மா ரஞ்சி தொடரில் விளையாடியது நல்ல விஷயம். ஆனால் அவர் அணி வெற்றி பெறும் நோக்கத்தில் விளையாடினாரா என்பது கேள்விக்குறிய விஷயம்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles