இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியின் (BGT) போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சவாலான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். ரோகித் மற்றும் விராட் கோலியின் மோசமான செயல்திறன் தொடர் முடியும் வரை எதிரொலித்தது.
இந்திய அணியின் கேப்டன்ரோகித் சர்மா, முதல் டெஸ்ட் போட்டியில் மனைவியின் மகப்பேறு காரணமாக விடுப்பு எடுத்திருந்தார், எனவே முதல் டெஸ்ட் போட்டியை வழி நடத்தி சென்ற ஜஸ்பிரித் பும்ரா அந்தப் போட்டியில் வெற்றியும் பெற்று தந்தார். இரண்டாவது டெஸ்டில் போட்டியில் ரோகித் சர்மா அணியில் சேர்ந்தாலும், அவரது செயல்திறன் குறைவாக இருந்தது, மேலும் இந்தியாவின் தொடர் செயல்திறனும் கீழ்நோக்கிச் சென்றது. இதனால் கடைசி கட்டத்தில் 1-3 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியே தழுவியது.
ரோகித் சர்மா மூன்று டெஸ்ட் போட்டிகளில் வெறும் 6.00 சராசரியுடன் 31 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். ரோகித் சர்மாவின் இந்த மோசமான செயல் திறனை பற்றி சுனில் கவாஸ்கர், “அணியின் முன்னேற்றத்திற்காக வேறொருவர் கேப்டன் பொறுப்பை ஏற்க வேண்டிய நேரம் இதுவாக இருக்கலாம்” என்று கூறியிருந்தார்.
இதனை கேப்டன் ரோகித் சர்மா பிசிசிஐ நிர்வாகிகளிடம் புகார் கடிதம் ஒன்றை அளித்திருப்பதாக பிசிசிஐ வட்டார தகவல் தெரிவிக்கின்றது.
“சுனில் கவாஸ்கர் தன்னை அந்த பாணியில் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை என்று ரோஹித் உணர்ந்ததாகவும், அதனால்தான் அவர் கவாஸ்கர் மீது பிசிசிஐயிடம் புகார் செய்ததாகவும். இவை அனைத்தும் அவரே அதிக அழுத்தத்தை உண்டாக்கியதால், அவர் அனைத்தையும் பிசிசிஐயிடம் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது” என அவர் கூறியிருப்பதாக நெருங்கி வட்டார மூலமாக செய்திகள் கசிந்து உள்ளது.

