ஆஸி தொடருக்கு எடுக்கல.. ஆனா இங்கிலாந்து தொடர்ல இந்த பையன கண்டிப்பா எடுக்கணும்.. ஜெயிக்கணும்னு ஆசை இருந்தா இதை பண்ணுங்க – சுனில் கவாஸ்கர் பேட்டி

ஜூன்-ஆகஸ்ட் 2025 இல் நடைபெறவுள்ள இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு இந்திய அணியின் ஆல் ரவுண்டரான வெங்கடேஷ் ஐயரை தேர்வாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர், சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

- Advertisement -

வெங்கடேஷ் ஐயர், 2024 ஆம் ஆண்டில் தனது முதல் கவுண்டி கிரிக்கெட் அனுபவத்தை லான்காஷையர் அணியுடன் பெற்றார். இங்கிலாந்தில் நடைபெறும் உள்நாட்டு போட்டியான கவுண்டி கிரிக்கெட்டில், லான்காஷையர் அணிக்காக அவர் விளையாடிய ஐந்து ஒருநாள் கோப்பை போட்டிகளில், 68 ரன்கள் அடித்ததுடன், மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். மேலும், கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் ஒன் போட்டிகளில் மூன்று மூன்று முறை விளையாடிய போது, அவர் மொத்தமாக 116 ரன்கள் சேர்த்திருந்தார்.

- Advertisement -

இந்த அனுபவத்தை தன் கருத்தில் கொண்டே, சுனில் கவாஸ்கர் அவரே இங்கிலாந்துக்கு எதிராக விளையாட இருக்கும் இந்திய அணியில் சேர்த்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என கூறியிருக்கிறார்.

- Advertisement -

அவரைப் பற்றியும் கொஞ்சம் யோசிங்க:

சுனில் கவாஸ்கர் ஸ்போர்ட்ஸ் ஸ்டாரில் கூறியதாவது, “இந்திய அணியின் தேர்வாளர்கள் வெங்கடேஷ் அய்யரின் மேலும் தனி கவனத்தை வைக்க வேண்டும், ஏனெனில் அவர் இன்னொரு சிறந்த ஆல்-ரவுண்டர் மற்றும் இடக்கை பேட்ஸ்மேன் ஆவார்.

அவர் பந்துவீச்சை கொஞ்சம் மேம்படுத்த வேண்டும், ஆனாலும் அவர் இங்கிலாந்தில் விளையாடி உள்ளதால் அவருக்கு அந்த அனுபவம் இருக்கலாம், எனவே அவரே இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் டெஸ்ட் தொடரில் சேர்ப்பது என்பது மிகவும் நல்ல தேர்வாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து நாள் கொண்ட டெஸ்ட் போட்டியானது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி முடிந்து ஐந்து நாள்களுக்குப் பிறகு நடைபெற உள்ளது.

தொடரின் முதல் போட்டி ஜூன் 20 ஆம் தேதி ஹெடிங்லி, லீட்ஸில் நடைபெறும், மீதமுள்ள நான்கு போட்டிகள் எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காம், லார்ட்ஸ், லண்டன், எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர் மற்றும் லண்டனின் கேனிங்டன் ஓவல் ஆகிய இடங்களில் நடைபெறும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles