8வது சதம்.. பால்கனியில் இருந்து பல்டி அடிக்க சிக்னல் கொடுத்த சுனில் கவாஸ்கர்.. ரிஷப் பண்ட் கொடுத்த பதில்

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்கள் குவித்த நிலையில், இங்கிலாந்து அணி 465 ரன்களை குவித்தது. இதன்பின் 6 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்ஸை தொடங்கிய சூழலில், 3வது நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 90 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து களத்தில் இருந்தது.

- Advertisement -

ரிஷப் பண்ட் 8வது சதம்

இந்த சூழலில் கேஎல் ராகுல் – சுப்மன் கில் கூட்டணி களமிறங்கியது. இதில் சுப்மன் கில் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், ரிஷப் பண்ட் களம் புகுந்தார். தொடக்கம் முதலே நிதானம் காட்டிய இருவரும், முதல் செஷனில் 63 ரன்களை மட்டுமே சேர்த்தனர். இதன்பின் 2வது செஷனில் ரிஷப் பண்ட் – கேஎல் ராகுல் கூட்டணி ரன் குவிப்பை தீவிரப்படுத்தியது.

- Advertisement -

அதற்கேற்ப சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் அரைசதத்தை கடக்க, கேஎல் ராகுல் பவுண்டரிகளாக விளாச தொடங்கினார். ஒரு கட்டத்தில் கேஎல் ராகுல் 90 ரன்களை கடந்த போது, ரிஷப் பண்ட் சிக்ஸ், பவுண்டரி என்று விளாசி கண் மூடி திறப்பதற்குள் 80 ரன்களை எட்டினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட், 98 ரன்களை எட்டிய போது, மைதானம் முழுக்க பதற்றம் நிலவியது.

- Advertisement -

சுனில் கவாஸ்கர் ரியாக்சன்

அந்த 2 ரன்களை எடுக்க நீண்ட நேரம் எடுத்து கொண்ட ரிஷப் பண்ட், இறுதியாக 130 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 8வது சதத்தை ரிஷப் பண்ட் நிறைவு செய்தார். அப்போது பால்கனியில் இருந்து ரிஷப் பண்டை கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டியதோடு, பல்டி அடித்து கொண்டாடுமாறு சிக்னல் கொடுத்தார்.

அதனை பார்த்த ரிஷப் பண்ட், உடல் கொஞ்சம் சோர்வாக உள்ளது. அடுத்த சதம் அடிக்கும் போது நிச்சயம் பல்டி அடிக்கிறேன் என்று சிக்னல் கொடுத்து அசத்தினார். முதல் இன்னிங்ஸிலும் ரிஷப் பண்ட் சதம் விளாசிய போது வர்ணனையில் இருந்த சுனில் கவாஸ்கர், சூப்பர்.. சூப்பர்.. சூப்பர் என்று பாராட்டி இருந்தார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles