ஐபிஎல் 2024 வந்த புது விதி.. இனி தோனி பட்லரே அடிக்க சிரமப்படுவாங்க.. ஸ்டெய்ன் அதிரடி பேட்டி

17 வது ஐபிஎல் சீசன் வரும் வெள்ளிக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற உள்ள நிலையில், முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் நிக்கும் நடைபெற உள்ளனது.

- Advertisement -

டி20 கிரிக்கெட் என்பது பொதுவாக பேட்ஸ்மேன்களுக்கான விளையாட்டு என்று ஒரு கருத்து நிலவும் நிலையில், அதனை மாற்றி அமைக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது புதிய விதியினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் பேட்ஸ்மேன்களுக்கான விளையாட்டு என்பது மாறி டி20 கிரிக்கெட் சரிசமமான நிலையை முன்னோக்கிச் செல்லும்.

- Advertisement -

அந்த விதி என்னவெனில், முதலில் ஒரு ஓவரில் ஒரு பவுன்சர் மட்டுமே வீச அனுமதி இருந்தது. இதனால் பேட்ஸ்மேன்கள் அந்த பாலை விடுத்து மற்ற பந்துகளுக்கு சற்று நிதானமாக விளையாடுவார்கள். இனி அவ்வாறு இல்லாமல், ஒரு ஓவருக்கு இரண்டு பவுசர்களை வீசிக்கொள்ளலாம் என்று அனுமதியை தற்போது வழங்கியுள்ளது. இதன் மூலம் ஒரு பவுன்சரை வீசி முடித்திருக்கும் நிலையில், அடுத்த பவுன்சர் வேண்டுமானாலும் வீசப்படலாம் என்று கலக்கத்திலேயே பேட்ஸ்மென்கள் அந்த ஓவரை எதிர்கொள்ள வேண்டி வரும்.

- Advertisement -

இது டி20 கிரிக்கெட்டை சுவாரஸ்யப்படுத்துவது மட்டுமில்லாமல் போட்டியைக் காண வரும் ரசிகர்களுக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. யார்க்கர் பந்துகளை கூட சற்று சமாளித்து விளையாடலாம். ஆனால் பவுன்சர் பந்துகளைத் தெளிவான பேட்ஸ்மேன்கள் கூட அவ்வப்போது அவுட் ஆகி வெளியேறி விடுவார்கள்.

ஆனால் இந்த புதிய விதி உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20 தொடர்களுக்கு அனுமதி இல்லை. ஐபிஎல் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்னாபிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டைன் கூறும்பொழுது
“ஒரு ஓவரின் ஆரம்பத்தில் பவுன்சர் பந்தினை வீசினால் அடுத்து பவுலர் யார்க்கர் பந்தினை வீசுவார்.

- Advertisement -

ஏனெனில் இதுவரை இரண்டாவது பவுன்சர் வீச அனுமதி கிடையாது. இதனால் பேட்ஸ்மேன்கள் சற்று சுதாரித்து அடுத்த பந்து லைன் அண்ட் லென்த்தில் விழாது என்று நிதானமாக விளையாடுவார்கள். ஆனால் தற்போது அப்படி இல்லை இனி அனைத்துமே மாறப் போகிறது. நிறைய பேட்ஸ்மேன்கள் யார்க்கர் பந்துகளுக்கு பயப்படுவார்கள். ஆனால் தோனி, பட்லர் போன்ற பேட்ஸ்மேன்களுக்கு யார்க்கர் பந்துகளை வெற்றிகரமாக வீசிட முடியாது.

அவர்கள் அடிப்பதற்கு என சில இடங்களை கணித்து வைத்திருப்பார்கள். ஆனால் பவுன்சர் பந்து அப்படியல்ல. இதற்கு எளிதாகவும் பீல்டிங் செட்டப் அமைக்க முடியும். பேட்ஸ்மேன்களுக்கு பின்னால் இரண்டு பீல்டர்களை செட் செய்தால் போதுமானது. எனவே எந்த வகையான பேட்ஸ்மேனும் பவுன்சர் பந்தை நேராக அடிப்பது கிடையாது. எனவே இந்த விதி பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் நன்மையாகும்..

எனவே ஒரு ஓவரில் வீசப்படும் பவுன்சர் குறித்து அதிகம் யோசிக்க தேவையில்லை. ஒரு பவுன்சர் முடிந்தாலும் இரண்டாவது பவுன்சர் இருக்கிறது என்று பந்துவீச்சாளர்கள் தைரியமாக பந்து வீச முடியும். இது பேட்ஸ்மேன்களை சந்தேகத்திலேயே வைத்திருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles