IPL 2025.. லக்னோ அணிக்கு ரஷ்ப் பண்ட் தான் கேப்டன்.. LSG அதிரடி அறிவிப்பு..
இந்திய அணியின் கீப்பராக உள்ள நட்சத்திர வீரர் ரஷ்ப் பண்ட் IPL 2025ல் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது குறித்து அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயன்கா மற்றும் பண்ட் இருவரும் கொல்கத்தாவில் சந்தித்து ஆலோசனை செய்த பிறகு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள்.
சமீபத்தில் நடந்த IPL 2025 தொடருக்கான மெகா ஏலத்தில் ரிஷ்ப பண்ட் 27 கோடிக்கு லக்னோ அணி வாங்கியது. இதன் மூலம் IPL வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை பெற்றார் பண்ட். கடந்த 9 வருடங்களாக டெல்லி அணிக்காக விளையாடிய இவரை போன சீசனில் டெல்லி அணி வெளிவிட்டது.
வழிநடத்த வரும் பண்ட்
லக்னோ அணி தனது கேப்டன் ராகுலை வெளிவிட்டது ஆகையால் பண்ட் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. எதிர்பார்ப்பின் போலவே லக்னோ அணி அதிக தொகையை பண்ட் மீது செலவு செய்து தட்டி சென்றது.
இதன்மூலம் குருனால் பாண்டியா, ராகுல், பூரான் அடுத்து நான்காவதாக லக்னோ அணியை பண்ட் வழிநடத்த உள்ளார்.
“ரிஷப் பண்ட் LSGன் சிறந்த வீரராக இருக்கப் போவதில்லை, IPLன் சிறந்த வீரராகவே இருக்கப் போகிறார். இவ்வளவு ஆர்வம் கொண்ட ஒருவரை பார்த்ததில்லை. அவர் பக்கத்து வீட்டு பையன் போல அணுகும் முறை, வீரர்கள், அணிகள் மற்றும் சிந்தனை செயல்முறை ஆகியவற்றுடனான அவரது தொடர்பு வேறுபட்டது. நான் அவரை ஒரு தலைவராக பார்க்கிறேன். IPL வரலாற்றில் அவர் சிறந்த கேப்டனாக இருப்பார்” என்று சஞ்சீவ் கோயங்கா கூறினார்.
முதல் கோப்பை பெற்று தருவாரா பண்ட்
2022 முதல் IPL தொடரில் பங்கேற்று வரும் லக்னோ அணி இதுவரை கோப்பை வென்றதில்லை. தற்போது லக்னோ அணியை வழிநடத்தும் பண்ட் அணிக்காக முதல் கோப்பையை பெற்றுத்தருவாரா என எதிர்ப்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
லக்னோ அணி விளையாடிய 3 சீசனில் முதல் இரண்டு சீசனில் சிறந்த 4 அணிகளில் ஒன்றாக வந்த லக்னோ அணி கோப்பையை வெல்ல தவறியது. சென்ற சீசனில் 7வது இடம் பிடித்த லக்னோ அணி இம்முறை சிறப்பாக விளையாடி கோப்பை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் வருகிறது.
இதுவரை 43 போட்டிகளில் கேப்டனாக விளையாடிய பண்ட் 23 வெற்றிகளை பெற்றுள்ளார். அதிக தொகைக்கு வாங்கப்பட்ட இவர் கோப்பையை கைப்பற்றுவார் என்று எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

