2026 நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் நாளை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் தோல்வியடையும் அணி அரையிறுதி வாய்ப்பிலிருந்து வெளியேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி தங்களது கடைசி இரண்டு போட்டிகளையும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதே சமயத்தில் ஜிம்பாபே அணியை சிறிய அணி என்று எடுத்துக் கொள்ளக் கூடாது என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் எச்சரிக்கை செய்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசும்போது “ஜிம்பாப்வே அணிக்கு இழப்பதற்கு எதுவுமே கிடையாது. அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் விளையாடுவார்கள். இதன் காரணமாக இந்திய அணிக்கு அவர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியை விட பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்கள். ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அரை இறுதிக்கு முன்னேறுவது குறித்த சிந்தனை அதிகமாக இருக்கும். இவர்களுக்கு அப்படி எதுவும் இருக்காது”
“மேலும் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியிடம் போராடி தோல்வி. அவர்கள் 187 என்ற பெரிய இலக்கை பார்த்ததும் பதட்டமடைந்து அழுத்தத்தில் விழுந்து விட்டார்கள். தற்போது இந்திய அணி செய்ய வேண்டியதெல்லாம் அழுத்தத்தால் மனச்சோர்வு அடைந்து விடக்கூடாது” என்று தெரிவித்திருக்கிறார்.

