நம்பள அவமானப்படுத்திட்டாங்க.. பைத்தியக்காரத்தனமான முடிவுகளை கம்பீர் சூர்யா எடுத்ததுதான் காரணம் – ஸ்ரீகாந்த் வருத்தம்

நேற்று இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி நிர்வாகம் எடுத்த மோசமான முடிவுகள்தான் தோல்விக்கு காரணமாக அமைந்திருக்கிறது என ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் முதல் ஓவரை ஆப்-ஸ்பின்னர் வீசி விக்கெட் எடுத்து இருந்த நிலையில் மூன்றாவது இடத்தில் வலதுகை வீரர் சூரியகுமார் யாதவ் வந்திருக்கலாம். மேலும் ஐந்தாவது இடத்தில் ஹர்திக் பாண்டியா விளையாடியிருந்தால் சரியாக இருக்கும். ஆனால் சிறப்பான பேட்ஸ்மேன் அவரை ஏழாவது இடத்தில் அனுப்பினார்கள்.

- Advertisement -

இதுகுறித்து ஸ்ரீகாந்த் தனது விமர்சனத்தில் “நேற்றைய போட்டியில் நம்மை அவமானப்படுத்தி விட்டார்கள். நாம்தான் எதிரணிகளுக்கு இப்படி செய்வோம்; ஆனால் நமக்கே அது நடந்து விட்டது. இந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வருவதற்கு சரியான காரணங்கள் இருந்தது. ஆனால் அவர் வரவில்லை. ரைட் லெப்ட் காமினேஷன் என்பதெல்லாம் முட்டாள்தனமானது. உங்கள் மனநிலை சரியாக இருந்தால் போதும்”

- Advertisement -

“அடுத்து ஹர்திக் பாண்டியா அழுத்தமான நேரங்களில் ஐந்தாவது இடத்தில் மிகச் சிறப்பாக விளையாடியிருக்கிறார்; ஆனால் அவரை ஏழாவது இடத்தில் அனுப்பி வைக்கிறார்கள். இது ஒரு பைத்தியக்காரத்தனமான முடிவு. இதுவெல்லாம்தான் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles