என்னை பொறுத்த வரைக்கும்.. சங்ககாராவுக்கு அடுத்ததா இந்த விஷயத்துல விராட் கோலிதான் பெஸ்ட் – மேத்யூஸ் கருத்து

தற்போதைய நவீன கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களாக இந்தியாவின் விராட் கோலி, இங்கிலாந்தின் ஜோ ரூட், ஆஸ்திரேலியாவின் ஸ்மித் மற்றும் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் ஆகியோர் திகழ்கிறார்கள்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இலங்கை அணியின் கிரிக்கெட் வீரரான ஏஞ்சலோ மேத்யூஸ் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் சங்ககாராவுக்கு அடுத்ததாக விராட் கோலி தான் சிறந்த வீரர் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரை மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் சிறந்து விளங்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 என மூன்று வடிவத்தொடர்க்கும் தன்னை அதற்கேற்றவாறு மாற்றிக் கொண்டு விளையாடுவது என்பது மிகவும் கடினமான ஒரு காரியம். ஆனால் அதில் விராட் கோலி தனித்துவமான வீரராக நிற்கிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்த நான்கு வீரர்களில் யார் சிறந்தவர் என்ற கருத்துக்கள் தற்போது சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. மூன்று வடிவ கிரிக்கெட் தொடரிலும் விராட் கோலி ஒரு பக்கம் அசத்திக் கொண்டிருந்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் தொடர்ந்து சீரான இடைவெளியில் ரன்கள் குவித்துக் கொண்டிருக்கிறார். 2019ஆம் ஆண்டிலிருந்து மட்டும் ஜோ ரூட் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 17 சதங்கள் அடித்து இருக்கிறார்.

விரைவாக இவர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தாலும் அது ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஆஸ்திரேலியாவின் ஸ்மித் மற்றும் நியூசிலாந்து அணியின் வில்லியம்சன் ஆகியோரும் தற்போது தங்களது பேட்டிங் ஃபார்மினை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் தற்போதைய காலகட்டத்தில் சிறந்த வீரர் யார்? என்ற கேள்விக்கு இலங்கை அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ் தனது பதிலை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் “தற்போதைய காலகட்டத்தில் நான் விராட் கோலியை தான் சிறந்த வீரர் என்று குறிப்பிடுவேன். ஏனென்றால் சர்வதேச கிரிக்கெட்டில் சங்ககாராவுக்கு அடுத்ததாக தொடர்ந்து சீரான இடைவெளியில் ரன்கள் குவித்து கொண்டிருக்கும் ஒரே வீரராக விராட் கோலி மட்டுமே இருக்கிறார். எனவே அவரையே நான் சிறந்த வீரராக கருதுகிறேன்” என்று தனது கருத்தினை தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க:ரிஷப் பண்ட் காட்டும் கொரளி வித்தைகளைப் பார்த்து தப்பாக எடை போட வேண்டாம்.. அவரிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.. ஆஸ்திரேலியாவை எச்சரித்த ரிக்கி பாண்டிங்

இன்னும் சில தினங்களில் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கும் நிலையில் விராட் கோலி சில சாதனைகளை உடைத்தெறிய போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வருகிற 19ஆம் தேதி இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles