ரிஷப் பண்ட் காட்டும் கொரளி வித்தைகளைப் பார்த்து தப்பாக எடை போட வேண்டாம்.. அவரிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.. ஆஸ்திரேலியாவை எச்சரித்த ரிக்கி பாண்டிங்

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் குறித்து ஆஸ்ட்ரேலிய லெஜன்ட் வீரர் ரிக்கி பாண்டிங் புகழ்ந்து பேசியதோடு, அவரை எளிதாக எடுத்துக் கொள்ள கூடாது என ஆஸ்திரேலிய அணியை எச்சரித்துள்ளார்.

- Advertisement -

கடந்த ஆண்டு சாவின் பிடியில் இருந்து நூழையில் தப்பித்து மறுபிறவி எடுத்துள்ளார் பண்ட். ஒன்றரை ஆண்டுக்கு முன்னர் அவருக்கு ஏற்ப்பட்ட பெரிய கார் விபத்து அனைவரையும் உலுக்கியது. இது பற்றியும் அதிலிருந்து மீண்டு வந்து இதைச் செய்வதாக பண்ட் கொடுத்த வாக்கைப் பற்றியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் பயிற்சியாளர் பாண்டிங் பேசியுள்ளார்.

- Advertisement -

அவர் கூறியதாவது, ” அவர் இவ்வளவு விரைவில் புத்துணர்ச்சியோடு மீண்டும் வந்தது மிகப் பெரிய கம்பேக். நீங்கள் இன்றும் அவரது காலைப் பார்த்தால், அவரின் கதையைக் கேட்டால் பயந்து போய்விடுவார். அத்தைய நிலையில் அவர் நிச்சயம் இந்த ஆண்டு ஐ.பி.எல் விளையாட மாட்டார் என நான் உறுதியாக நினைத்தேன். “

- Advertisement -

” ஆனால் பண்ட் என்னிடம் தான் நிச்சயம் வருவதாக வாக்கு அளித்தார். மீண்டு வந்தால் கூட இம்பாக்ட் வீரராக பயன்படுத்தலாம் என எண்ணினேன். அவர் எதற்கும் சலிக்காமல் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடி அணிக்காக டாப் 3 ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். பின்னர் டி20ஐ உலகக் கோப்பையில் அணியின் வெற்றிக்கு உதவினார். ” என்றார் பாண்டிங்.

ரிஷப் பண்ட்டின் விடாமுயற்சி, போராடும் குணம் தான் தன்னை அதிகம் ஈர்த்தது என ரிக்கி பாண்டிங்கே கூறியுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் துவங்கவுள்ளது. அதில் ரிஷப் பண்ட்டை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

- Advertisement -

” பண்ட் மிகவும் ஜாலியான வீரர் தான். விக்கெட் கீப்பராக அவர் செய்யும் நக்கலகளை நாம் பார்த்துள்ளோம். அதற்க்காக அவரை எளிதாக எடுத்துக் கொள்ள கூடாது. அவர் மிகவும் சீரியசான கிரிக்கெட்டர். ஏற்கனவே 5 சதங்கள் விளாசி தோனியைத் தாண்டி விட்டார். ” எனக் கூறியுள்ளார் ரிக்கி பாண்டிங்.

இதற்கு முன் நடந்த ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் அவர்களை அடக்கியதில், ரிஷப் பண்ட் பெரும் பங்காற்றினார். அதுமட்டுமில்லாமல் அவர் மீண்டும் சிகப்பு நிறப் பந்து கிரிக்கெட் விளையாடத் துவங்கிவிட்டார். தற்போது நடந்துக் கொண்டிருக்கும் துலிப் டிராபியில் அரை சதம் விளாசிய ஃபார்முக்கு வந்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles