இலங்கைக்கு சொந்த மண்ணில் நடந்த அவமானம்.. சீறி வந்து செஞ்சுவிட்ட இங்கிலாந்து.. அடங்கிப்போன ரசிகர்கள்

இன்று டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி தங்களது சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியிடம் 51 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக சரணடைந்து தோல்வியடைந்து இருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் மழை குறிப்பிடுவதற்கான வாய்ப்புகள் இருந்த நிலையில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது சாதகமான விஷயமாக பார்க்கப்பட்டது.

- Advertisement -

இதற்கு தகுந்தபடியே இங்கிலாந்து அணியும் பேட்டிங்கில் பெரிய அளவில் தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் மட்டுமே தாக்குப்பிடித்து விளையாடி 62 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. வெல்லலகே மூன்று விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலங்கை பவர் பிளேவில் 35 ரன்கள் மட்டும் எடுத்து ஐந்து முக்கிய விக்கட்டுகளை இழந்துவிட்டது. கேப்டன் சனகா மட்டும் தாக்குப்பிடித்து விளையாடி 30 ரன்கள் எடுத்தார். இறுதியில் அந்த அணி 95 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. வில் ஜேக்ஸ் மூன்று விக்கெட் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிக்கு முன்பு வரை வாய் பேசி வந்த இலங்கை ரசிகர்கள் இந்த முடிவால் சோகமாக இருக்கிறார்கள்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles