ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் ஐபிஎல் 2025 ஐ ஹைதராபாத் அணி இன்று தொடங்க உள்ளது.2024 ஆம் ஆண்டு முதல் இவர்களின் சக்திவாய்ந்த பேட்டிங் யூனிட் இந்த முறை இன்னும் சிறப்பாக இருப்பதால் 300 ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை படைக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த பேச்சுக்கள் சம்பந்தமாக அணி நிர்வாகமும் அவ்வப்போது செய்திகளை வெளியிட்டு வந்தன. ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருக்கும் கேப்டனாக கம்மின்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களுக்கான அறிமுக நிகழ்ச்சியில் இந்த முறை 300 ரன்கள் இருக்கும் என்பதை சூசகமாக கூறினார்.
கம்மின்ஸ் தனது அணியைப் பற்றி கூறும் போது “கடந்த ஆண்டு மிகவும் அற்புதமான ஆண்டு என்று நான் நினைக்கிறேன். எனவே ஸ்டேடியம் நிரம்பிய கடந்த ஆண்டு போல் எங்கும் விளையாட முடிந்தால், சிறுவர்கள் மட்டையுடன் ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறார்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் அங்கேயே தொங்கினர். எனவே இந்த ஆண்டு இதேபோன்ற குழு செயல்திறனை நாம் செய்ய முடிந்தால், இது மிகவும் வேடிக்கையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன், நாங்கள் போட்டியில் நீண்ட தூரம் செல்ல முடியும்.300 ரன்கள் என்பது எல்லோரும் விரும்புவது, நாங்கள் அதைப் பற்றி கொஞ்சம் பேசினோம், ஆனால் நாங்கள் வெற்றி பெறும் வரை, நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அணியில் சிறந்த வீரர்கள் இருப்பது, 250 க்கு மேல் மூன்று முறை அடித்தது, என கடந்த வருடம் எங்களுக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. நான் இந்த முறை எங்களது பேட்ஸ்மேன்கள் 300ஐ நோக்கி பயணிப்பார்கள்” என்று கூறினார்.
இவரின் இந்த பேச்சு தற்பொழுது சமூக வலைதளங்களில், பலரின் எதிர்ப்புகளையும் சிலரின் ஆதரவையும் சம்பாதித்து. ஹைதராபாத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய பணித்து தற்பொழுது ஹைதராபாத் அணி பேட்டிங் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

