வருகிற ஜூன் மாதம் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் விளையாடுவது குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நோர்கியா சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் ஆர்வத்தை தூண்டுவதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்னும் போட்டி தொடரை ஆரம்பித்தது. அதில் இரண்டு முறையும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு முறையும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒரு முறை தோல்வி அடைந்த நிலையில் மூன்றாவது முறை லீக் சுற்றுகளில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியை தோல்வி இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு இழந்துள்ளது.
முதல் அணியாக ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்ற நிலையில் இரண்டாவது அணியாக தென்னாப்பிரிக்க அணி தகுதி பெற்றது. இந்த சூழ்நிலையில் வருகிற ஜூன் மாதம் 11-ம் தேதி இந்த இரண்டு அணிகள் மோதும் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியை விட தங்களது அணிக்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் இந்த முறையை நாங்கள் நிச்சயமாக கோப்பையை வென்று சாதனை படைப்போம் என தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆன்ரிச் நோர்கியா சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இறுதிப் போட்டி நடைபெற உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானம் எப்போதுமே எங்களுக்கு சிறப்பானதாக இருந்திருக்கிறது. கடந்த காலங்களில் நாங்கள் அந்த மைதானத்தில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பதால் இந்த முறை நாங்கள் நிச்சயமாக ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றுவோம் என்கிற நம்பிக்கை உள்ளது.
அது மட்டுமல்லாமல் கடந்த சில ஆண்டுகளாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இந்த முறை நாங்கள் எப்படியும் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி கோப்பையை வெல்வோம் என்கிற நம்பிக்கை உள்ளது” என கூறி இருக்கிறார். தென் ஆப்பிரிக்கா அணியை பொருத்தவரை இதுவரை ஒரு முறை கூட ஐசிசி கோப்பையை கைப்பற்றாத நிலையில் இந்த முறை ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

