பும்ரா பேசுனதுக்கு பதிலடி கொடுக்கவே.. எங்க கோச் மண்டியிட வைப்போம்னு பேசி இருப்பார் – தென் ஆப்பிரிக்கா கேப்டன் விளக்கம்

இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி இரண்டிலும் தோல்வி அடைந்து பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்க தலைமை பயிற்சியாளர் இந்திய வீரர்களை மண்டியிட வைப்போம் என்று எதற்காக பேசினார் என தென் ஆப்பிரிக்கா கேப்டன் தெம்பா பவுமா விளக்கிக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா தலைமை பயிற்சியாளர் சுக்ரீ டோனட் இரண்டாவது டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் ஆடிக் கொண்டிருந்தபோது நான்காவது நாளில் விரைவாக டிக்ளர் செய்யாமல் வேண்டுமென்றே நேரத்தை வீணடித்து தாமதமாக டிக்ளர் செய்திருப்பார். அது ஏன் என்று கேட்டதற்கு இந்திய வீரர்களை மண்டியிட வைக்க நாங்கள் அவ்வாறு செய்தோம் என்று பேசியது சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து டெம்பா பவுமா பேசும்போது இந்திய வீரர்கள் தங்களது வரம்பினை தாண்டியதால் தான் எங்கள் பயிற்சியாளர் அப்படி பேசினார் என்று பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க:இந்த படு சுமாரான டெஸ்ட் டீமிலும் அவர வச்சுதான் ஓரளவு தப்பிக்கிறாங்க.. அவரும் நாளைக்கு இல்லன்னா இந்திய அணி அவ்ளோதான் – ரவிச்சந்திரன் அஸ்வின்

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “எங்கள் பயிற்சியாளர் சொன்ன கருத்து இன்று காலைதான் எனக்கு தெரிந்தது. அப்போது நான் போட்டியில் கவனம் செலுத்தியதால் அவரிடம் பேச எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சுக்ரீ 60 வயதுக்கு நெருக்கமானவர் என்பதால் தன்னுடைய கருத்தை கேட்பார். இந்திய வீரர்கள் தங்கள் வரம்பை தாண்டி பேசியிருக்கிறார்கள் அதனால் எங்கள் பயிற்சியாளர் அப்படி பேசி இருக்கிறார் என்று கூறவில்லை. இருப்பினும் இதுகுறித்து அவர் சிந்திப்பார்” என்று அவர் பேசியிருக்கிறார். மேலும் போட்டியின் போது பும்ரா பவுமாவை குள்ளன் என்று ஹிந்தியில் பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி வைரலானது குறிப்பிடத்தக்கது

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles