இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி இரண்டிலும் தோல்வி அடைந்து மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதுகுறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போதைய இந்திய டெஸ்ட் அணியின் நிலைமையை கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டிலும் தோல்வி அடைந்திருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தான் முக்கிய காரணம் என்று காரணம் காட்டப்பட்ட நிலையில் தற்போது தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்திருப்பது இந்திய அணியின் டெஸ்ட் தரம் குறித்த கேள்வியை பலமாக எழுப்ப வைத்திருக்கிறது.
இதையும் படிங்க:கம்பீர் மேல தப்பு சொல்லாதீங்க.. அவர் கடுமையாக உழைப்பவர்.. கோச் வழிகாட்டதான் முடியும் – சுரேஷ் ரெய்னா ஆதரவு
இந்த சூழ்நிலையில் இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் போது “இப்போ இருக்கிற இந்திய டெஸ் டீம் என்பது படு சுமாரான டெஸ்ட் டீம் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த அணியை வைத்துக் கொண்டு ஒரு சில அணிகளை தான் அடிக்க முடியும். மேலும் ஒரு சில அணிகளுக்கு எதிராக நிற்கவே முடியாது. மேலும் இந்திய அணியின் பும்ராவை வைத்து தான் நல்ல டீம்களுக்கு எதிராக ஓரளவு தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அவரும் நாளை இல்லை என்றால் இந்த அணி என்ன செய்யப் போகிறது? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

