கம்பீர் மேல தப்பு சொல்லாதீங்க.. அவர் கடுமையாக உழைப்பவர்.. கோச் வழிகாட்டதான் முடியும் – சுரேஷ் ரெய்னா ஆதரவு

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகளிலும் மோசமான தோல்விகளை சந்தித்து தற்போது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. இதில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன.

- Advertisement -

இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி எட்டு விக்கெடுகள் இழந்து மோசமான தோல்வியை சந்தித்து இருக்கிறது. இதற்கு கௌதம் கம்பீரின் நிலைத்தன்மையற்ற அணி அமைப்பு மற்றும் வீரர்கள் இடையேயான நம்பிக்கையின்மை போன்றவை முக்கிய காரணிகளாக பார்க்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க:மூளை மழுங்கினாதான் இந்திய அணியில் இப்படி திட்டங்கள் செயல்படுத்துவாங்க.. கொஞ்சமாச்சும் திருந்துங்க பாஸ்.. இந்திய முன்னாள் வீரர் கடும் விமர்சனம்

- Advertisement -

இதனால் கம்பீர் மீது விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு ஆதரவாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரைனா சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் கூறும் போது “கௌதம் கம்பீர் கடுமையாக உழைத்திருக்கிறார், அவர் மீது எந்த ஒரு தப்பும் கிடையாது. வீரர்கள் தான் களத்தில் நின்று விளையாட வேண்டும். ஒரு பயிற்சியாளர் வழிகாட்ட மட்டுமே முடியும். அவரது தலைமையில் தான் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஆசிய கோப்பை என வெள்ளை பந்து பார்மெட்டில் ஜெயித்தோம்” என்று பேசி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles