இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி இரண்டிலும் தோல்வியடைந்து தற்போது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான வெங்கடேஷ் பிரசாத் இது குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தலைமையில் விளையாடும் நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்தது. இந்த சூழ்நிலையில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னால் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி ஆதிக்கம் செலுத்திதென் ஆப்பிரிக்க அணி ஆதிக்கம் செலுத்தி 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் டெஸ்ட் தடவை கைப்பற்றி இருக்கிறது.
இதையும் படிங்க:இந்திய டெஸ்ட் அணியை படு குழிக்கு தள்ளும் கம்பீர்.. 25 வருஷமா காப்பாத்துன ரெக்கார்டு வீணாய் போச்சு
இந்திய அணியின் மோசமான செயல்பாடு குறித்து வெங்கடேஷ் பிரசாத் கூறும்போது “இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி விளையாடுவதை பார்க்கும்போது ஏமாற்றமாக உள்ளது. ஆல் ரவுண்டர்கள் மீது கொண்டுள்ள அதீத முகமும் அவர்களை முழுமையாக பந்து வீச வைக்காததும் மூளை மழுங்கிய செயலாகும். முற்றிலும் மோசமான திட்டங்கள் மற்றும் மோசமான உடல் மொழி. சொந்த மண்ணில் இரண்டு தொடர்களில் இந்திய அணி ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. இன்னும் இந்திய அணிக்கு 9 மாத இடைவெளி இருப்பதால் அதற்குள் தனது தவறுகளை சரி செய்யும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் பேசியிருக்கிறார்.

