2023 ஆம் ஆண்டு முடியும் போது இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு மிகப்பெரிய பரிட்சையை கொடுத்துவிட்டு சென்று இருக்கிறது. பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் இந்திய அணி மூன்று டி20 மூன்று ஒருநாள் மட்டும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றன.
இதில் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் முற்றிலும் இளைஞர்கள் கொண்ட அணியை களமிறங்குகிறது. இதில் நேற்று முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தது.
ஏனென்றால் இதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விட்டு தீர்ந்திருந்தது.இந்த நிலையில் இரண்டாவது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. எனினும் இந்திய ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் டெஸ்ட் போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். ஏனென்றால் இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றதில்லை.
இந்த நிலையில் செய்தியாளரிடம் பேசிய தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ஜாம்பவான் ஜாக் காலிஸ் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா தொடரில் வெற்றி பெற வேண்டும் என்றால் விராட் கோலி அதிக அளவில் ரன் சேர்க்க இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விராட் கோலி கடந்த காலங்களில் சிறப்பாக விளையாடி இருக்கிறார். தற்போது அவர் நல்ல பார்மில் இருக்கிறார். மீண்டும் இம்முறை டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்று விராட் கோலி நினைப்பார்.
அவர் ஒரு மிகப்பெரிய வீரர் நல்ல ரெக்கார்டும் வைத்திருக்கிறார். நிச்சயமாக தனக்கு இருக்கும் அனுபவத்தை மற்ற வீரர்களுடன் பேசி பகிர்ந்து கொள்வார். இளம்வீரர்கள் அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்வார்கள். இந்த ஆடுகளத்தில் என்ன எதிர்பார்க்கலாம் என்பது குறித்து விராட் கோலி இடம் பேசி இளம் வீரர்கள் தெரிந்து கொள்வார்கள்.
இந்தியா தென்னாப்பிரிக்கா மண்ணில் முதல் தொடரை வெல்ல வேண்டும் என்றால் விராட் கோலி கண்டிப்பாக ரன்கள் சேர்த்து ஆக வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். தென்னாப்பிரிக்கா மண்ணில் விராட் கோலி இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 219 ரன்களை அடித்திருக்கிறார்.
இதில் சராசரி 51 ஆகும். இதில் இரண்டு சதம் அடங்கும் 2018 ஆம் ஆண்டு செஞ்சுரியனில் விராட் கோலி 153 ரன்கள் அடித்திருந்தார். ஆனால் அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

